பூர்ணிமா பானர்ஜி Purnima Banerjee | |
---|---|
பிறப்பு | பூர்ணிமா கங்குலி 1911 கல்கா, பஞ்சாப் |
இறப்பு | 1951 நைனித்தால், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் |
பணி | இந்திய விடுதலை இயக்க ஆர்வலர், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
உறவினர்கள் | அருணா ஆசப் அலி (சகோதரி) |
பூர்ணிமா பானர்ஜி என்கிற பூர்ணிமா கங்குலி, (Purnima Banerjee; 1911-1951[1]) ஓர் இந்திய விடுதலை இயக்க ஆர்வலராவார். இவர் 1946 முதல் 1950 வரை இந்திய அரசியலமைப்பு சபை உறுப்பினராக இருந்தார்.[2][3]
இவர் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர் அருணா ஆசப் அலியின் இளைய சகோதரி ஆவார்.[4] இவர்களின் தந்தை உபேந்திரநாத் கங்குலி ஒரு உணவக உரிமையாளராக இருந்தார். அவர் கிழக்கு வங்காளத்திலுள்ள பரிசால் மாவட்டத்தைச் சேர்ந்தவர். (இப்போது வங்காளதேசம்) ஆனால் ஐக்கிய மாகாணங்களில் குடியேறினார்.[5]இவரது தாயார் அம்பாலிகா தேவி பல பிரம்ம பாடல்களை எழுதிய புகழ்பெற்ற பிரம்ம அறிஞர் திரிலோக்யநாத் சன்யாலின் மகளாவார்.
பூர்ணிமா இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பிரயாக்ராஜ் பகுதியின் செயலாளராக இருந்தார். மேலும், அப்பகுதியில் தொழிற்சங்கங்கள், விவசாயிகளின் கூட்டங்கள் மற்றும் அதிக கிராமப்புற ஈடுபாட்டை நோக்கிய பணிகளை ஏற்பாடு செய்வதற்கும் இவர் பொறுப்பாக இருந்தார். இவர் உப்புச் சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டார்.[6] பின்னர், இவர் உத்தரபிரதேச சட்டமன்றத்திலும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக இருந்தார்.[7]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பூர்ணிமா, சுதந்திரம் பெற்று சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1951 ஆம் ஆண்டில் நைனித்தாலில் இறந்தார்.[8]
The CA had 299 members: 15 women and 284 men. The names of the women members who were part of the CA were: Ammu Swaminathan, Begum Aizaz Rasul, Dakshayani Velayudhan, Durgabai Deshmukh, Hansa Jivraj Mehta, Kamla Chaudhry, Leela Roy, Malati Choudhury, Purnima Banerjee, Rajkumari Amrit Kaur, Renuka Ray, Sarojini Naidu, Sucheta Kriplani, Vijaya Lakshmi Pandit and Annie Mascarene. Nearly all of these women members were associated with the national movement, and their commitment to the cause of women since pre-Independence days was remarkable.