பூலாய் (P161) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Pulai (P161) Federal Constituency in Johor | |
பூலாய் மக்களவைத் தொகுதி (P161 Pulai) | |
மாவட்டம் | ஜொகூர் பாரு மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 166,653 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பூலாய் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கங்கார் பூலாய்; இசுகந்தர் புத்திரி; கெலாங் பாத்தா; முத்தியாரா ரினி; தஞ்சோங் பெலப்பாஸ் |
பரப்பளவு | 73 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | சுகாய்சான் காயாட் (Suhaizan Kayat) |
மக்கள் தொகை | 291,876 (2020)[4][5] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பூலாய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pulai; ஆங்கிலம்: Pulai Federal Constituency; சீனம்: 埔来国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P161) ஆகும்.[6]
பூலாய் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து பூலாய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
பூலாய் மக்களவைத் தொகுதி என்பது ஜொகூர் மாநிலத்தில் அமைந்துள்ள இசுகந்தர் மலேசியா வளர்ச்சி மண்டலத்தின் ஒரு தொகுதி ஆகும். இசுகந்தர் மலேசியா, தெற்கு ஜொகூர் பொருளாதார வளர்ச்சி மண்டலம் (South Johor Economic Region) (SJER) என்றும் அழைக்கப் படுகிறது.[8]
2006 நவம்பர் 6-ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, மலேசியாவின் முதல் பொருளாதார வளர்ச்சி மண்டலம் ஆகும். பல பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்குக் கணிசமான அளவிற்கு வளர்ச்சியை வழங்கும் வகையில் இந்தப் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இசுகந்தர் மலேசியா சுமார் 2,217 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மண்டலத்தில் ஜொகூர் பாரு மாநகரம், தெற்கு பொந்தியான், கூலாய், பாசிர் கூடாங், இசுகந்தர் புத்திரி ஆகிய பகுதிகள் உள்ளன.[9][10]
பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பூலாய் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P113 | 1974–1978 | முகமட் ரகுமாட் (Mohamed Rahmat) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P131 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P142 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | அப்துல் காதிர் அனுவார் (Abdul Kadir Annuar) | ||
11-ஆவது மக்களவை | P161 | 2004–2008 | நூர் ஜசுலான் மொகமட் (Nur Jazlan Mohamed) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | சலாவுதீன் அயூப் (Salahuddin Ayub) |
பாக்காத்தான் அரப்பான் (அமாணா) | |
15-ஆவது மக்களவை | 2022–2023 | |||
2023–தற்போது வரையில் | சுகாய்சான் காயாட் (Suhaizan Kayat) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சுகாய்சான் காயாட் (Suhaizan Kayat) | பாக்காத்தான் அரப்பான் | 48,283 | 61.54 | 6.22 | |
சுல்கிப்லி ஜபார் (Zulkifli Jaafar) | பெரிக்காத்தான் நேசனல் | 29,642 | 37.78 | 20.15 | |
சும்சுதீன் முகமட் பவுசி (Samsudin Mohamad Fauzi) | சுயேச்சை | 528 | 0.67 | 0.67 | |
மொத்தம் | 78,453 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 78,453 | 99.46 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 429 | 0.54 | |||
மொத்த வாக்குகள் | 78,882 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,66,653 | 47.33 | 23.63 ▼ | ||
Majority | 18,641 | 23.77 | 4.51 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [12] |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சலாவுதீன் அயூப் (Salahuddin Ayub) | பாக்காத்தான் அரப்பான் | 64,900 | 55.33 | 8.48 ▼ | |
நூர் ஜசுலான் முகமட் (Nur Jazlan Mohamed) | பாரிசான் நேசனல் | 31,726 | 27.05 | 3.47 ▼ | |
லோ காயோங் (Loh Kah Yong) | பெரிக்காத்தான் நேசனல் | 20,677 | 17.63 | 17.63 | |
மொத்தம் | 1,17,303 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 1,17,303 | 99.06 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,111 | 0.94 | |||
மொத்த வாக்குகள் | 1,18,414 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,65,313 | 70.96 | 11.96 ▼ | ||
Majority | 33,174 | 28.28 | 5.01 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [13] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)