பூவிழி வாசலிலே | |
---|---|
வேறு பெயர் | பூவிழி வாசலிலே-கைவீசும் தென்றல் |
வகை | நாடகம் |
மூலம் | அடிமைத் தொழிலாளர்கள் |
எழுத்து | ரொபின் பட் ஜாவேத் சித்தீகி |
முகப்பிசை | பூவிழி வாசலிலே |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 01 |
அத்தியாயங்கள் | 600+ |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | மகேஷ் பட் |
படப்பிடிப்பு தளங்கள் | இலக்னோ தில்லி |
ஓட்டம் | தோராயமாக 20-24 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ராஜ் தொலைக்காட்சி |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
பூவிழி வாசலிலே திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடராகும். இது உடான் என்ற பெயரில் இந்தியில் ஒளிபரப்பாகும் தொடரின் தமிழ் மொழி மாற்றம் ஆகும். அடிமைத் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டுள்ளது[1].
ஆசாத்கஞ்ச் என்ற கிராமத்தில் உள்ள அனைவரும் பணக்கார நிலப்பிரபுவான அண்ணாச்சி கமல் நாராயணனுக்கு அடிமைத் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். அவர்களின் கையில் அடிமை முத்திரை பதிக்கப்பட்டு இருந்தது. கஸ்தூரி என்ற பெண் கர்ப்பமாக இருந்த போது அவளது அப்பா இறந்துவிடுகிறார். இதனால் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய மாதவன் அண்ணாச்சியிடம் பணம் கேட்கின்றனர். பணத்திற்கு பதிலாக கஸ்தூரி வயிற்றில் உள்ள குழந்தையை அடகு வைக்க வேண்டும் என்று அஸ்வினி கூறுகிறார். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். கஸ்தூரிக்கு தேன்மொழி என்ற மகள் பிறந்தாள்.
ஏழு வருடங்களுக்குப் பிறகு மாதவன் தேன்மொழியை அழைத்துச் சென்று அண்ணாச்சி வீட்டில் அடிமைத் தொழிலாளியாக ஒப்படைக்கிறார். அந்த வீட்டில் தேன்மொழிக்கு பல வீட்டு வேலைகள் கொடுத்து கொடுமைப்படுத்துகின்றனர். மனோகரின் மகன் விஷ்ணு தேன்மொழிக்கு நண்பனாக மாறினான். அவன் உதவியுடன் தேன்மொழி அந்த வீட்டில் இருந்து தப்பித்து விட்டாள். இதையறிந்து கோபமடைந்த அண்ணாச்சி மாதவனை கடத்தச் சொல்கிறார். இதனால் கவலையடைந்த கஸ்தூரி மீண்டும் தேன்மொழியை அண்ணாச்சி வீட்டிற்கு வந்து விட்டுச்செல்கிறார்.
ஈஷ்வர் ராவத் என்ற ஒருவர் தேன்மொழி தன் அடிமை விலங்கை உடைத்து சிறகடித்துப் பறக்க உதவுகிறார். அவர் தேன்மொழியை தன் சொந்த மகள் போல தன் வீட்டில் தங்க வைத்தார். அவளை பள்ளிக்கும் அனுப்பினார். தேன்மொழி ஓடுவதில் சிறந்தவள் என்று அர்ஜுன் கண்ணா என்ற உடற்பயிற்சி ஆசிரியர் அறிகிறார். அவர் தேன்மொழிக்கு ஓட பயிற்சி கொடுக்கிறார். அதற்பிறகு தேன்மொழி ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றிபெற்றாள்.
கமல்-அஸ்வினி தம்பதிக்கு பாக்யா என்ற மகள் இருப்பதாகத் தெரியவருகிறது. அவளை கிராமத்து மக்கள் தெய்வமாக நினைத்தனர். இந்த மூடநம்பிக்கையை பயன்படுத்திக் கொண்டு கமல் நாராயண் பணம் சம்பாதித்தான். பிறகு அர்ஜுன்-பாக்யா இருவரும் காதலித்து மணந்து கொண்டனர். அண்ணாச்சியின் திட்டத்தால் ஈஷ்வர் ஒரு வெடிகுண்டு விபத்தில் இறந்துவிடுகிறார்.
தேன்மொழி ஓட்டப்பந்தய வீராங்கனையாக வளர்ந்து இருந்தார். கண்மணி அண்ணாச்சியன் மகன் சூரஜை காதலித்தாள். தேன்மொழி விஷ்ணுவை காதலித்தாள். திருமண நாளன்று சூரஜ் வேண்டுமென்றே தேன்மொழியை திருமணம் செய்கிறார். விஷ்ணு கண்மணியை மணக்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு காலங்கள் சென்றன. விஷ்ணு கண்மணியை காதலிக்க ஆரம்பித்தார். தேன்மொழி-சூரஜ் தம்பதியரும் காதலிக்க ஆரம்பித்தனர். தற்போது இவர்களின் காதல் கதையாக பூவிழி வாசலிலே தொடர் நகர்ந்து வருகிறது.