பெஃபர்மான் சூட் வரிசை

கணிதத்தில் பெஃபா்மான் சூட் வரிசை (Feferman–Schütte ordinal) (Γ0) என்பது பொிய எண்ணிடத்தக்க வரிசையாகும். கணிதவியலாளர்கள் சாலமன் பெஃபா்மான், குா்ட் ஸுட் ஆகிய இருவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. இதன் குறியீடான Γ0 என்பது பெஃபர்மானால் பரிந்துரைக்கப்பட்டது[1]

பெஃபா்மான் ஸுட் வரிசையைத் தவிர வேறெந்தவொரு தரமான குறியீடுகளும் கணங்களின் வரிசைக்கு இல்லை. பெஃபா்மான் ஸுட் வரிசையைக் குறிப்பதற்கும் பல்வேறு விதங்கள் உள்ளன. அவற்றுள் சில , , , போன்ற வரிசை வீழ் சார்புகளைப் பயன்படுத்துகின்றன.

வரையறை

[தொகு]

பெஃபா்மான் ஸுட் வரிசை, 0 ஐ தொடக்கமாகக் கொண்டதும், வரிசைகளின் கூட்டல் செயலையும் வெப்லன் சாா்புகளையும்  (φα(β)) கொண்டு உருவாக்க முடியாததுமான மிகச்சிறிய வரிசையாக வரையறுக்கப்படுகிறது.

அதாவது இது,

φα(0) = α. என்பதை நிறைவு செய்யும் வகையிலமைந்த மிகச்சிறிய  "α" ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. G. Takeuti, Proof Theory (1975, p.413)
  • Pohlers, Wolfram (1989), Proof theory, Lecture Notes in Mathematics, vol. 1407, Berlin: Springer-Verlag, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-51842-8
  • Weaver, Nik (2005), Predicativity beyond Gamma_0