![]() | Peckhamia doesn't exist. |
![]() | |
துறை | சிலந்தி |
---|---|
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர் | டேவிட் ஈ கில் |
Publication details | |
வரலாறு | 1977–முதல் |
பதிப்பகம் | பெக்காம் சமூகம் |
வெளியீட்டு இடைவெளி | கால இடைவெளியின்மை |
திறந்த அணுக்கம் | ஆம் |
Standard abbreviations | |
ISO 4 | Peckhamia |
Indexing | |
ISSN | 2161-8526 1944-8120 |
OCLC no. | 19834872 |
Links | |
பெக்காமியா என்பது ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்ட, திறந்த அணுகல் கொண்ட, குதிக்கும் சிலந்திகள் பற்றிய ஆராய்ச்சியை உள்ளடக்கிய அறிவியல் ஆய்விதழ் ஆகும்.[1][2] இது பெக்காம் சமூகத்தினால் வெளியிடப்படுகிறது. இந்த சமூகத்தில் குதிக்கும் சிலந்தி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஜார்ஜ் மற்றும் எலிசபெத் பெக்காமின் ஆகிய குதிக்கும் சிலந்தி இயற்கை ஆர்வலர்கள் நினைவாக 1977-ல் நிறுவப்பட்ட இந்த ஆய்விதழுக்கு பெக்காமிய எனப்பெயரிடப்பட்டது. இதன் தற்போதைய தலைமை தொகுப்பாசிரியர் டேவிட் ஈ. கில் ஆவார்.[2]
மயில் சிலந்தியுடன் தொடர்புடைய பல சிற்றினங்கள் முதலில் பெக்காமியாவில் விவரிக்கப்பட்டுள்ளன. இதில் மராடசு ஹாரிசி (2011) , சைடிசு மியூட்டன்சு (2012), சைடிசு விர்காடசு (2012), மராடசு இராபின்சோனி (2012), மராடசு இசுபிகாடசு (2012), மராடசு வெலுடினசு (2012), மற்றும் மராடசு அவிபசு (2014).[3] [4] [5] 2015 இல் பெக்காமியாவில் பானுலசு பேரினமும் முதல் முதலில் விவரிக்கப்பட்டது [6]
பெக்காமியா ஆய்விதழில் வெளியாகும் ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்கங்கள் விலங்கியல் பதிவேட்டில் வெளியிடப்படுகிறது.[2][5]