பெங்காலான் கெம்பாஸ்
Pongkalan Kompeh | |
---|---|
Pengkalan Kempas | |
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 2°27′N 102°01′E / 2.450°N 102.017°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | போர்டிக்சன் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 71150 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 697 0000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
பெங்காலான் கெம்பாஸ் நெகிரி செம்பிலான் மலாய் மொழி: Pongkalan Kompeh; (மலாய்; ஆங்கிலம்: Pengkalan Kempas; சீனம்: 彭卡兰甘巴斯; ஜாவி: ڤڠكالن كمڤاس) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், போர்டிக்சன் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம். போர்டிக்சன் நகரத்திலிருந்து 34 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த நகரத்தில், மலேசியாவின் புகழ்பெற்ற கலங்கரை விளக்கமான ரச்சாடோ முனை கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.[1]
பெங்காலான் கெம்பாஸ் வரலாற்று வளாகம் (Pengkalan Kempas Historical Complex) அல்லது கெம்பாஸ் கோட்டை இங்குதான் உள்ளது. இந்தக் கோட்டை கெராமட் ஊஜுங் பாசிர் என்றும் அழைக்கப்படுகிறது.[2]
இந்த இடம் மர்மமான சில கல்லறைகளைக் கொண்ட இடம் என அறியப்படுகிறது. அந்தக் கல்லறைகளில் வாள் மற்றும் கரண்டி வடிவங்களில் பெருங்கற்கால கற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்தக் கல்லறைகள் கி.பி 2-ஆம் மற்றும் 3-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
இந்த பெருங்கற்கால கற்கள் அரபு மொழி மற்றும் சுமத்திரா எழுத்துக்களைச் சார்ந்த செதுக்கல்களைக் கொண்டுள்ளன.[3]
பெங்காலான் கெம்பாஸ் கல்வெட்டுகள், பொதுவாக சுமத்திராவின் புவேட் புலோபியூட் (Puet-plohpeut) வளாகத்தில்; பண்டைய அரபு மொழி, சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட எழுத்துக்களை சார்ந்து இருக்கின்றன.
1457-1477-ஆம் ஆண்டுகளில் மலாக்கா சுல்தானகத்தின் சுல்தான் மன்சூர் ஷா ஆட்சியின் போது அவரை எதிர்த்த சேக் அகமது மஜ்னுன் என்ற மதத் தலைவரின் கல்லறையும் இங்கே உள்ளது. சேக் அகமதுவின் கல்லறை ”கெரமாட் சுங்கை ஊடாங்” என்று அழைக்கப்படுகிறது.
1511-இல் மலாக்காவைக் கைப்பற்றிய பிறகு, போர்த்துகீசியர்கள் அதன் கப்பல்களுக்கு வழிகாட்ட ஒரு கலங்கரை விளக்கத்தை உருவாக்க விரும்பினார்கள். தஞ்சோங் துவான் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கு கேப் ரச்சாடோ (Cape Rachado) என்று பெயரிடப்பட்டது. [4]
பின்னர், 1528 - 1529ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. அதன் பின்னர் மூன்று நாட்டவர்கள்; போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரித்தானியர்கள் கவனத்திலும் கண்காணிப்பிலும் இந்தக் கலங்கரை விளக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த இடம் தற்போது மலேசிய தேசிய பாரம்பரிய சட்டம் 2005-இன் கீழ் தேசிய பாரம்பரிய வளாகம் என மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. [5]