பெசுட் (P033) மலேசிய மக்களவைத் தொகுதி திராங்கானு | |
---|---|
Besut (P033) Federal Constituency in Terengganu | |
பெசுட் மக்களவைத் தொகுதி (P033 Besut) | |
மாவட்டம் | பெசுட் மாவட்டம் திராங்கானு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 112,718 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | பெசுட் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெசுட் மாவட்டம், கோலா பெசுட், கம்போங் ராஜா, பெர்கெந்தியான் தீவு, ஜெர்த்தே |
பரப்பளவு | 1,027 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | சே முகமட் சுல்கிப்ளி ஜூசோ (Che Mohamad Zulkifly Jusoh) |
மக்கள் தொகை | 127,825 (2020)[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
பெசுட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Gua Musang; ஆங்கிலம்: Gua Musang Federal Constituency; சீனம்: 勿述国会议席) என்பது மலேசியா, திராங்கானு, பெசுட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P033) ஆகும்.[8]
பெசுட் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து பெசுட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
பெசுட் மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
பெசுட் மாவட்டத்திற்கு கிழக்கில் தென் சீனக்கடல்; வடக்கிலும் மேற்கிலும் கிளாந்தான் மாநிலம் எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் வடக்கு நுழைவாயிலாக அமைகின்றது.
கம்போங் ராஜா நகரம் (Kampung Raja), பெசுட் மாவட்டத்தின் தலைநகரம். இருப்பினும் பெசுட் மாவட்டத்தில் உள்ள மற்றொரு நகரான ஜெர்த்தே நகரம் (Jerteh), கம்போங் ராஜா நகரத்தைவிட மிகவும் வளர்ச்சி அடைந்த நகரமாகத் திகழ்கின்றது.
மற்றொரு முக்கிய நகரம் மீன்பிடித் துறைமுகமான கோலா பெசுட் (Kuala Besut). தவிர சாபி (Jabi), அப்பால் (Apal), பாசிர் அகார் (Pasir Akar) மற்றும் தெம்பிலா (Tembila) போன்ற பிற சிறிய நகரங்களும் கிராமங்களும் இந்த மாவட்டத்தில் உள்ளன.
பெசுட்டில் உள்ள பெரும்பாலான மலாய்க்காரர்கள், திராங்கானிய அடையாளத்தை விட கிளந்தானிய அடையாளத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். திராங்கானு மலாய் மொழிக்குப் பதிலாக கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியை (Kelantanese Malay) பேசுகிறார்கள்.
பெசுட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1958-ஆம் ஆண்டில் பெசுட் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P025 | 1959–1963 | புர்கானுதீன் அல்-எல்மி (Burhanuddin al-Helmy) |
மலேசிய இசுலாமிய கட்சி |
மலேசிய நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P025 | 1963–1964 | புர்கானுதீன் அல்-எல்மி (Burhanuddin al-Helmy) |
மலேசிய இசுலாமிய கட்சி |
2-ஆவது மக்களவை | 1964–1969 | முகமது தாவூத் அப்துல் சமாட் (Mohd. Daud Abdul Samad) | ||
1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[10] | |||
3-ஆவது மக்களவை | P025 | 1971–1973 | உசைன் சுலைமான் (Hussain Sulaiman) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
1973–1974 | பாரிசான் நேசனல் (அம்னோ) | |||
4-ஆவது மக்களவை | P028 | 1974–1978 | சக்காரியா அப்துல் ரகுமான் (Zakaria Abdul Rahman) | |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P030 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | முகமது யூசுப் முகமது நூர் (Mohamed Yusof Mohamed Noor) | ||
9-ஆவது மக்களவை | P033 | 1995–1999 | இட்ரிசு ஜூசோ (Idris Jusoh) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | அசன் முகமது (Hassan Mohamed) |
மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | அப்துல்லா முகமது ஜின் (Abdullah Md Zin) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | இட்ரிசு ஜூசோ (Idris Jusoh) | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | சே முகமட் சுல்கிப்ளி ஜூசோ (Che Mohamad Zulkifly Jusoh) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | சே முகமட் சுல்கிப்ளி ஜூசோ (Mohd Azizi Abu Naim) |
49,569 | 59.85% | + 17.93% | |
பாரிசான் நேசனல் | நவி முகமது (Nawi Mohamad) |
30,903 | 37.41% | - 4.51% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | அப்துல் ரகுமான் அசீசு அபாஸ் (Abd Rahman @ Abd Aziz Abas) |
4,339 | 2.50% | - 4.18% ▼ | |
தாயக இயக்கம் | வான் நசாரி வான் ஜூசோ (Wan Nazari Wan Jusoh) |
553 | 0.24% | + 0.24% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 84,831 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 877 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 246 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 86,487 | 79.06% | - 4.43% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 111,650 | ||||
பெரும்பான்மை (Majority) | 18,666 | 22.44% | + 15.96% | ||
மலேசிய இசுலாமிய கட்சி | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11] |