பெசுராமி மோர்ச்சா, (Besharmi Morcha) மேலும் ஸ்லட் வாக் பெஸ்ராமி மோர்ச்சா எனவும் அறியப்படும் இந்த அமைப்பினை 2011 ஆம் ஆண்டில் கனேடிய பெண்கள் துவங்கினர். இந்தியாவில் இதற்கு நடத்தை கெட்ட பெண்ணின் நடை எனப் பொருள்படும் (ஸ்லட்வாக்). இந்த அமைப்பினை கனேடியாவில் உள்ள காவல் துறை அதிகாரிகள் பெண்கள் அணியும் உடையே அவர்களது பாலியல் வல்லுறவிற்க்கு காரணமாக அமைகிறது எனும் குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக உருவாக்கினார்கள். [1] [2] இந்த பிரச்சினை பற்றியும் பெண்கள் கல்விக்காகவும் அவர்கள் உலகம் முழுவதும் பல் நிகழ்வுகளை நடத்தியுள்ளனர்.
முதல் பெஷார்மி மோர்ச்சா 17 ஜூலை 2011 அன்று போபாலில் நடைபெற்றது.[3] அதைத் தொடர்ந்து 31 ஜூலை 2011 அன்று இந்தியாவின் தலைநகரான தில்லியில் பெசார்மி மோர்ச்சா தில்லி எனும் பெயரில் நடைபெற்றது .பின்னர் பெஷார்மி மோர்ச்சா லக்னோ நிகழ்வானது 21 ஆகஸ்ட் 2011 அன்று நடந்தது. [4]
பெஷார்மி மோர்ச்சா பெங்களூரு நிகழ்வானது டிசம்பர் 4, 2011 அன்று சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் ஹாங்காங்கில் இதே போன்ற நிகழ்வுகளுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது. ஏனென்றால் அந்த நகரங்களில் இதனை நடத்துவதற்கு எதிர்ப்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் காவல்துறையால் அந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது. பெஷார்மி மோர்ச்சாவை எதிர்க்கும் குழுக்கள் இதனை "வன்முறை போராட்டம்" எனக் கூறினர். அமைப்பாளர்களில் ஒருவரான தில்லான் மவுலி சிலர் இந்த நிகழ்வு "இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி அல்ல" என்று தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். [5] ஒரு பெண்கள் அமைப்பின் துணைத் தலைவர் என்னை அழைத்து, ஸ்லட்வாக்கின் போது எந்தப் பெண்களும் சலிப்பான உடையில் காணப்பட்டால், அவர்கள் துடைப்பத்தால் அடிக்கப்படுவார்கள் என்று தன்னிடம் கூறியதாகக் கூறினார்." [5]
கிறிஸ்டி தாம்சன், மிஸ் மேகசின் எனும் இதழில் பின்வருமாறு எழுதினார், "... விமர்சகர்கள் கூறுவது போல், பெண்கள் வெற்று உடம்பில் நடக்கவில்லை. அவர்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதற்காக தெருவில் இறங்கி நடக்கிறார்கள்.[6]
பெஷார்மி மோர்ச்சா ( இந்தி: बेशर्मी मोर्चा ) பெரும்பாலும் ஆங்கிலத்தில் "நாணமற்ற எதிர்ப்பு" அல்லது "நாணமற்ற முன்பகுதி" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாணமற்றவர்களின் அணிவகுப்பு" "நாணமற்றவர்களின் பிரச்சாரம்" எனவும் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [7] இதன் மாறுபட்ட பண்பாட்டு அம்சங்கள் மற்றும் மொழிகளை பறைசாற்றும் விதமாக இந்தியாவில் பெஷார்மி மோர்ச்சா எனும் பெயர் தேர்வு செய்யப்பட்டது. [8]
"ஸ்லட் " என்ற வார்த்தை இந்தி போன்று மற்ற இந்திய மொழிகளில் நேரடியாகவோ அல்லது அதற்கு பொருத்தமாகவோ மொழிபெயர்க்கப்படவில்லை. ஸ்லட் என்பதற்கு சற்று பொருத்தமான நேரடி மொழிபெயர்ப்பு ரேன்டி( இந்தி: रंडी ) [9] இதற்கு "விபச்சாரி" என்று பொருள். போராட்டக்காரர்கள் பெண்களைப் பாதுகாப்பதற்கும் பாலியல் வன்முறையிலிருந்து சுதந்திரத்தை அடைவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதை விட, விபச்சாரிகளாக தங்களை அடையாளப்படுத்துகிறார்கள் அல்லது விபச்சாரிகளுக்கான உரிமையை நாடுகிறார்கள் என்று பார்வையாளர்கள் நம்புவார்கள் என்று இதன் அமைப்பாளர்கள் கவலைப்பட்டனர்.
பெஷார்மி ( இந்தி: बेशर्मी ) இது நாணமின்றி, நாணமில்லாத் துணிவு கொண்ட என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆபாசம் என்பதனை மறைமுகமாக உணர்த்தும் வகையில் அமைந்திருக்கலாம் . [10]
மோர்ச்சா ( இந்தி: मोर्चा ) எதிர்ப்பு மற்றும் நடவடிக்கை என்ற கருத்தியலுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டது.இந்த பிரச்சாரங்கள் பெரும்பாலும் அரசியல் எதிர்ப்பைக் குறிக்கிறது . மேலும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் இராணுவ முனைப்புகளைக் கொண்டுள்ளது. [11] [12]
பெஷார்மி மோர்ச்சாவுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத பல அர்த்தங்கள் உள்ளன. இது பொதுவாக "நாணமின்றி மற்றும் தைரியமாக ஒன்றுபட்ட வழியில் எதிர்ப்பு தெரிவிப்பது என்றும் மற்றவர்கள் தவறாக அல்லது ஆபாசமாக கூட பார்க்கலாம்" என்பதாக பொருள்படக் கூடிய வகையிலேயே பெரும்பாலான மொழிபெயர்ப்புக்கள் உள்ளது.