பெடோமின் பூனைப்பாம்பு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | போயிகா
|
இனம்: | போ. பெட்டோமி
|
இருசொற் பெயரீடு | |
போயிகா பெட்டோமி வால், 1909 |
போயிகா பெட்டோமி (Boiga beddomei), என்பது பொதுவாக பெடோமின் பூனைப்பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இது கொலுப்ரிடே குடும்பத்தில் உள்ள பின்புற-பற்கள் கொண்ட பாம்பு வகையாகும். இந்த சிற்றினம் இந்தியாவின் மகாராட்டிரா, குசராத்து மற்றும் கோவா மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி.[2]
பெடோமி பூனைப்பாம்பு இந்தியாவில், மகாராட்டிரா மாநிலத்தில் (பீமாசங்கர், முல்சி, கொய்னா, வசோட்டா) மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வடக்குப் பகுதிகளில் காணப்படுகிறது. இது குசராத்து, கோவா மற்றும் வடக்கு கருநாடகா[3] மலைத்தொடர்களிலும் காணப்படுகிறது.[4]
பிரித்தானியத் தரைப்படை அதிகாரி மற்றும் தாவரவியலாளர் ரிச்சர்ட் ஹென்றி பெடோம் (1830-1911) என்பவரின் பெயரால் போயிகா பெட்டோமி என இந்தப் பாம்பு பெயரிடப்பட்டது. [5]
பெடோமி பூனைப்பாம்பு ஒரு மெலிந்த பாம்பு ஆகும். தன் தலை கழுத்திலிருந்து வேறுபட்டுக் காணப்படும். முதுகெலும்பு செதில்கள் வலுவாக விரிவடைந்து காணப்படும். முதுகுபுறம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் அடர் பழுப்பு முதுகெலும்பு குறுக்கு பட்டைகளுடன் இருக்கும். வயிற்றுப்பகுதியின் மேற்பரப்பு மஞ்சள்-நுரை நிறத்தில், கரும்புள்ளிகளுடன் காணப்படும்.
19 சாய்ந்த வரிசைகளில் முதுகு செதில்கள் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும். முதுகெலும்பு பகுதியில் இவை வலுவாக விரிவடைந்து அறுகோணமாகக் காணப்படும். வயிற்றுப்புறத்தில் 238-252 எண்ணிக்கையிலும் வாலின் பக்கப்பகுதியில் 113-127 என்ற எண்ணிக்கையிலும் காணப்படும்.
பெடோமி பூனைப்பாம்பின் விருப்பமான இயற்கை வாழ்விடம் 1,000 m (3,300 அடி) உயரத்தில் உள்ள பசுமையான காடுகள் ஆகும். இது இரவாடுதல் வகையினைச் சார்ந்தது. மரங்களில் வாழக்கூடியது.
பெடோமி பூனைப்பாம்பின் முக்கிய உணவாக ஓந்தி, தரைப்பல்லி, அரணை மற்றும் தவளை உள்ளது.
பெடோமி பூனைப்பாம்பின் முட்டையிடுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்யக்கூடியது.