பெட்டாலிங் ஜெயா (P105) மலேசிய மக்களவைத் தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Petaling Jaya (105) Federal Constituency in Selangor | |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | பெட்டாலிங் ஜெயா தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெட்டாலிங் ஜெயா; சுபாங் ஜெயா பண்டார் சன்வே, கிளானா ஜெயா, பண்டார் உத்தாமா டாமன்சாரா, சா ஆலாம், சுங்கை பூலோ, கோத்தா டாமன்சாரா, சுங்கைவே |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
நீக்கப்பட்ட காலம் | சா ஆலாம் தொகுதி |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | (2022) |
மக்களவை உறுப்பினர் | வோங் சென் (Wong Chen) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 196,588 (2022)[1] |
தொகுதி பரப்பளவு | 55 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Petaling Jaya; ஆங்கிலம்: Petaling Jaya Federal Constituency; சீனம்: 八打灵再也国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P105) ஆகும்.
பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 1986-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1986-ஆம் ஆண்டில் இருந்து பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பெட்டாலிங் ஜெயா மாநகரம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். கிழக்குப் பகுதியில் கோலாலம்பூர்; வடக்குப் பகுதியில் சுங்கை பூலோ, மேற்குப் பகுதியில் சிலாங்கூரின் தலைநகரமான சா ஆலாம், மற்றும் சுபாங் ஜெயா, தெற்குப் பகுதியில் கின்ராரா, பூச்சோங் ஆகிய பெரும் நகர்ப் பகுதிகள் உள்ளன.
இந்த மாநகரத்தின் பரப்பளவு 97.2 சதுர கி.மீ. 2020-ஆம் ஆண்டின் மக்கள்தொகை புள்ளிவிவரங்களின்படி இங்கு 902,086 பேர் வசிக்கின்றனர். பெட்டாலிங் ஜெயா நகருக்கு 2006 சூன் 20-ஆம் தேதி மாநகர்த் தகுதி (City Status) வழங்கப்பட்டது.
பெட்டாலிங் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ளது. இதனால், அண்மைய காலங்களில் இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டின் அதிகாரப் பூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,298,123 மக்கள் வசிக்கின்றார்கள்.
பெட்டாலிங் மாவட்டம் சுமார் 484.32 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. ஏராளமான நகர துணைப் பிரிவுகள், பழைய துணை நிர்வாகங்கள் (முக்கிம்) உள்ளன. இவை அனைத்தும் டாமன்சாரா, சுபாங் மற்றும் பெட்டாலிங் போன்ற ஒரே பெயர்களைப் பகிர்ந்து கொள்கின்றன. பெட்டாலிங் மாவட்டம் 4 முக்கிம் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா தொகுதியின் மக்களவை உறுப்பினர்கள் (1995 - 2022) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சா ஆலாம்; பெட்டாலிங் ஜெயா தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P090 | 1986–1990 | எங் செங் சாய் (Eng Seng Chai) |
ஜனநாயக செயல் கட்சி |
8-ஆவது மக்களவை | 1990–1995 | குவா கியா சூங் (Kua Kia Soong) | ||
தொகுதி சீரமைப்பு; பெட்டாலிங் ஜெயா உத்தாரா, பெட்டாலிங் ஜெயா செலாத்தான் மற்றும் சுபாங் தொகுதி என பிரிக்கப்பட்டது. | ||||
தொகுதி சீரமைப்பு; பெட்டாலிங் ஜெயா செலாத்தான், கிளானா ஜெயா மற்றும் சா ஆலாம் தொகுதிகளில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டது. | ||||
14-ஆவது மக்களவை | P105 | 2018 | மரியா சின் அப்துல்லா (Maria Chin Abdullah) |
பாக்காத்தான் (சுயேச்சை)[5] |
2018–2022 | பாக்காத்தான் (பி.கே.ஆர்) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது | லீ சியான் சுங் (Lee Chean Chung) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
195,148 | - | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
148,021 | 74.74% | ▼ 8.00 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
145,862 | 100.00% | - |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
495 | - | - |
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1,664 | - | - |
பெரும்பான்மை (Majority) |
50,575 | 34.68% | ▼ -14.88 |
வெற்றி பெற்ற கட்சி: | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[6] |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
லீ சியான் சுங் (Lee Chean Chung) |
பாக்காத்தான் (PH) | 83,311 | 57.12% | -11.40 ▼ | |
தேங் புக் (Theng Book) |
பெரிக்காத்தான் (PN) | 32,736 | 22.44% | +22.44 | |
சிவ் ஹியன் டாட் (Chew Hian Tat) |
பாரிசான் (BN) | 23,253 | 15.94% | -3.01 ▼ | |
மஸ்வீன் மொக்தார் (Mazween Mokhtar) |
உள்நாட்டு போராளிகள் கட்சி (PEJUANG) | 4,052 | 2.78% | +2.78 | |
எசாம் முகமது நோர் (Ezam Mohd Nor) |
மலேசிய மக்கள் கட்சி (Parti Rakyat Malaysia) |
2,049 | 1.40% | +1.40 | |
கே.ஜே. ஜான் (KJ John) |
சுயேச்சை | 461 | 0.32% | 0.32 |