பெட்டாலிங் மாவட்டம்

பெட்டாலிங் மாவட்டம்
Daerah Petaling
சிலாங்கூர்
பெட்டாலிங் மாவட்டம் அமைவிடம்
பெட்டாலிங் மாவட்டம் அமைவிடம்
Map
பெட்டாலிங் மாவட்டம் is located in மலேசியா
பெட்டாலிங் மாவட்டம்
      பெட்டாலிங் மாவட்டம்
ஆள்கூறுகள்: 3°05′N 101°35′E / 3.083°N 101.583°E / 3.083; 101.583
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
தொகுதிபண்டார் பாரு பாங்கி
நகராட்சிபெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
(கிழக்கு)
சா ஆலாம் மாநகராட்சி
(மேற்கு)
சுபாங் ஜெயா மாநகராட்சி
(தெற்கு)
அரசு
 • மாவட்ட அதிகாரிமிசுரி இட்ரிசு
பரப்பளவு
 • மொத்தம்4,700 km2 (1,800 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்22,98,123
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
40xxx, 43xxx, 46xxx, 47xxx
தொலைபேசி எண்கள்+6-03-5, +6-03-6, +6-03-7, +6-03-8
வாகனப் பதிவெண்கள்B

பெட்டாலிங் மாவட்டம் (Petaling District) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். பெட்டாலிங் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-இல் நிறுவப்பட்டது. அதே நாளில்தான் கோலாலம்பூர் மாநகரம் ஒரு கூட்டர்சு நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்த மாவட்டம் மலேசியத் தலைநகரை ஒட்டியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய ஒரு நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது. 1991-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 633,165 பேர் வசிப்பதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.


பொது

[தொகு]

2020-ஆம் ஆண்டின் அதிகாரப் பூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,298,123 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இந்த மாவட்டம் சுமார் 484.32 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. ஏராளமான நகர துணைப் பிரிவுகள், பழைய துணை நிர்வாகங்கள் (முக்கிம்) உள்ளன. இவை அனைத்தும் டாமன்சாரா, சுபாங் மற்றும் பெட்டாலிங் போன்ற ஒரே பெயர்களைப் பகிர்ந்து கொள்கின்றன. நிர்வாக குழப்பத்தை அதிகம் சேர்க்கின்றன.

பெட்டாலிங் மாவட்டத்திற்கு ஐந்து வகையான துணைப் பிரிவுகள் உள்ளன. அவையாவன மறு ஒழுங்கமைக்கப்பட்ட நகராட்சி மன்றம், மாவட்ட மன்றத் துணைப்பிரிவுகள், தேர்தல் தொகுதிகள் மற்றும் துணைப்பிரிவுகள் ("முக்கிம்") என்பனவாகும்.

டெமசுகோ மற்றும் ஐ.கே.இ.ஏ ஆகிய விற்பனை நிலையங்கள் உட்பட பல வணிக வளாகங்கள் டாமன்சாரா பகுதி போன்ற பல வளர்ந்து வரும் நகரங்களில் அமைந்துள்ளன. சுபாங் விமான நிலையம், பெட்டாலிங் மாவட்ட அலுவகம் என்பன சுபாங்கில் அமைந்துள்ளன.

மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் 2010

[தொகு]

பின்வரும் பெட்டாலிங் மாவட்ட மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[1]:

பெட்டாலிங் மாவட்டத்தின் மக்கள் தொகை இனவாரியாக
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாய்க்காரர்கள் 873,787 48.20%
சீனர்கள் 580,639 32.03%
இந்தியர்கள் 193,044 10.65%
மற்றவர்கள் 13,399 0.74%
மொத்தம் 1,812,633 100%

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]

பெட்டாலிங் மாவட்டம் 4 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வரையறை வரலாற்று நிர்வாக நோக்கங்களுக்காக மட்டுமே ஆகும். இது நவீன விரைவான வளர்ச்சியையும் 1997-இல் மறுசீரமைப்பையும் பிரதிபலிக்காது. பெட்டாலிங் மாவட்டத்தின் 4 முக்கிம்கள்.

புக்கிட் ராஜா; சுங்கை பூலோ; டாமன்சாரா; பெட்டாலிங்

  1. புக்கிட் ராஜா
  2. சுங்கை பூலோ
  3. டாமன்சாரா
  4. பெட்டாலிங்

    அரசு

    [தொகு]
    பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகம்
    பெட்டாலிங் மாவட்டத்தின் 3 உள்ளூராட்சி அதிகார வரம்புகள். சிவப்பு நிறத்தில் பெட்டாலிங் ஜெயா, மேலே வெள்ளை நிறத்தில் ஷா ஆலம் மற்றும் கீழே வெள்ளை நிறத்தில் சுபாங் ஜெயா.

    மாவட்டம் மிகவும் நகரமயமாகி உள்ளது. எனவே மாவட்டத்தில் பொது வசதிகளின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு என்பன மூன்று உள்ளூர் அரசாங்கங்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

    ஷா ஆலாம் மாநகர மன்றம்

    [தொகு]

    ஷா ஆலாம் மாநகர மன்றம் (Petaling Jaya City Council), ஷா ஆலாம் மாநகரத்தை நிர்வகிக்கிறது. இது கிள்ளான் மாவட்டத்தின் தென் பகுதியில் சில பகுதிகள், புக்கிட் ராஜா , செத்தியா ஆலாம், சுபாங் மற்றும் சுங்கை பூலோ ஆகிய பகுதிகளிலும் தன் அதிகார வரம்பைப் பயன்படுத்துகிறது.

    பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றம்

    [தொகு]

    பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (Petaling Jaya City Council), பெட்டாலிங் ஜெயா மாநகரத்தை நிர்வகிக்கிறது.

    சுபாங் ஜெயா நகராட்சி மன்றம்

    [தொகு]

    சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் மாவட்டத்தின் தென் பகுதிகளான சுபாங் ஜெயா, யு.இ.பி. சுபாங் ஜெயா (யு.எஸ்.ஜே.), புத்ரா ஹைட்ஸ், பத்து தீகா, பூச்சோங் பகுதிகள் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் போன்ற பகுதிகளுடன் அதன் அதிகார எல்லைக்குள் நிர்வகிக்கிறது.

    கல்வி

    [தொகு]

    பெட்டாலிங் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் கீழ் தேசியக் கல்வி நடைபெறுகின்றது. 2005-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள்:

    • 99 மலாய்த் தொடக்கப் பள்ளிகள்
    • 16 சீனத் தொடக்கப் பள்ளிகள்
    • 16 தமிழ்த் தொடக்கப் பள்ளிகள்
    • 65 உயர்நிலைப் பள்ளிகள்
    • 35 அனைத்துலகப் பள்ளிகள் - தனியார் பள்ளிகள்
    • 1 தொழில்நுட்ப இடைநிலைப் பள்ளி
    • 1 சிறப்புக் கல்விப் பள்ளி

    மேற்கோள்கள்

    [தொகு]

    வெளி இணைப்புகள்

    [தொகு]