பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்தியா

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்திய அரசு
ஆண்டு நிதி42,901 (US$540) (2020-21 est.) [1]
அமைப்பு தலைமைகள்
வலைத்தளம்mopng.gov.in/en

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆகியவற்றின் ஆய்வு, உற்பத்தி, சுத்திகரிப்பு, விநியோகம், சந்தைப்படுத்தல், இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பான இந்திய அரசாங்கத்தின் அமைச்சகமாகும். இந்த அமைச்சகதின் நடப்பு மூத்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி[2] மற்றும் இணை அமைச்சர் இராமேஷ்வர் தெலி ஆவர். எம். எம். குட்டி இதன் அரசுச் செயலாளர் ஆவார். இதன் தலைமை அலுவலகம் புது தில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் உள்ளது.

செயல்பாடுகள்

[தொகு]
  • இயற்கை எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய வளங்களின் ஆய்வு மற்றும் கையகப்படுத்தல்.
  • இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி, விநியோக விநியோகம், சந்தைப்படுத்தல் மற்றும் விலை நிர்ணயம்.
  • எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல்.
  • பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான சேர்க்கைகள்.
  • திட்டமிடல், மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு

அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்கள்

[தொகு]
  • எண்ணெய் வயல் சேவைகளின் திட்டமிடல், மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை அமைப்பு
  • இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட்[3]
  • இந்தோ-பர்மா பெட்ரோலிய நிறுவனம் (IBP Company)[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Union Budget 2020-21 Analysis" (PDF). prsindia.org. 2020. Archived from the original (PDF) on 2020-02-26. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  2. Ministers and therir Mistries of India
  3. பொறியாளர்கள் இந்தியா
  4. IBP Company Ltd

வெளி இணைப்புகள்

[தொகு]