பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான பிரகடனம் ( Declaration on the Elimination of Discrimination Against Women) என்பது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் பிரகடனமாகும். இது பெண்களின் உரிமைகள் குறித்த அமைப்பின் கருத்துக்களை கோடிட்டுக் காட்டுகிறது. இது 7 நவம்பர் 1967 அன்று பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது [1] பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான சட்டப்பூர்வ 1979 மாநாட்டிற்கு பிரகடனம் ஒரு முக்கியமான முன்னோடியாக இருந்தது. பாலின சமத்துவத்தை மேம்படுத்துவது, குறிப்பாக பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாக இருந்தது. இது 1967 இல் பெண்களின் நிலை குறித்த ஆணையத்தால் வரைவு செய்யப்பட்டது [2] பிரகடனத்தின் கொள்கைகளை செயல்படுத்த, பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை உருவாக்கப்பட்டு 3 டிசம்பர் 1981 அன்று அமல்படுத்தப்பட்டது.
பிரகடனம் உலக மனித உரிமைகள் சாற்றுரையின் கட்டமைப்பைப் பின்பற்றுகிறது. இதில் ஒரு முன்னுரையுடன் பதினொரு கட்டுரைகள் உள்ளன.
பெண்களுக்கு எதிரான பாகுபாடு "அடிப்படையில் அநீதியானது மற்றும் மனித கண்ணியத்திற்கு எதிரான குற்றமாகும்" என்று கட்டுரை 1 அறிவிக்கிறது. [3] "பாகுபாடு" என்பது வரையறுக்கப்படவில்லை.
பிரிவு 2, பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை ஒழிப்பதற்கும், சட்டத்தின் கீழ் சமத்துவம் அங்கீகரிக்கப்படுவதற்கும், பாகுபாட்டிற்கு எதிராக இருக்கும் ஐ.நா மனித உரிமைக் கருவிகளை மாநிலங்கள் அங்கீகரித்து செயல்படுத்துவதற்கும் அழைப்பு விடுக்கிறது.
பெண்களுக்கு எதிரான முன்முடிவை அகற்ற பொதுக் கல்வியை 3வது பிரிவு முன் மொழிகிறது.
வாக்களிக்கும் உரிமை மற்றும் பொதுப் பதவியைத் தேடும் மற்றும் வகிக்கும் உரிமை உள்ளிட்ட முழு தேர்தல் உரிமைகளையும் பெண்கள் அனுபவிக்க வேண்டும் என்று பிரிவு 4 கூறுகிறது.
பிரிவு 5 ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தங்கள் தேசத்தை மாற்றிக்கொள்ளும் உரிமையைக் கோருகிறது.
பிரிவு 6 பெண்கள் பொது சட்டத்தில் முழு சமத்துவத்தை அனுபவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. குறிப்பாக திருமணம் மற்றும் விவாகரத்தை சுற்றியும், குழந்தை திருமணங்கள் சட்டத்திற்கு புறம்பானது ந்ச்ன்பது பற்றியும் கூறுகிறது..
பிரிவு 7 குற்றவியல் தண்டனையில் பாலின பாகுபாட்டை நீக்குவதற்கு அழைப்பு விடுக்கிறது.
பெண்களின் அனைத்து வகையான போக்குவரத்தையும் பெண்கள் மீதான பால்வினைத் தொழிலின் சுரண்டலையும் எதிர்த்துப் போராட மாநிலங்களுக்கு 8வது பிரிவு அழைப்பு விடுக்கிறது.
பிரிவு 9 பாலினத்தைப் பொருட்படுத்தாமல் கல்விக்கான சம உரிமையை உறுதிப்படுத்துகிறது.
கட்டுரை 10 வேலையிடத்தில் சம உரிமைகள், வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டாமை, சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு ஆகியவற்றைக் கோருகிறது.
பிரிவு 11 பிரகடனத்தின் கொள்கைகளை செயல்படுத்த மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கிறது.