பெண்கள் பன்னாட்டு இருபது20 (WT20I) குறைந்த அளவிலான நிறைவுகளைக் கொண்டு பெண்களால் விளையாடப்படும் துடுப்பாட்ட வடிவமாகும் . பெண்கள் பன்னாட்டு இருபது20 என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் உறுப்பினராக இருக்கும் இரு நாடுகளுக்கு இடையில் விளையாடப்படுவதனைக் குறிக்கிறது. [1] முதல் போட்டி 2004 இல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது, [2] [3] இந்தப் போட்டி முதல் இருபது -20 சர்வதேச ஆண்கள் அணிகளுக்கு இடையே நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. [4] ஐ.சி.சி பெண்கள் உலகக் கிண்ணம் இருபது -20 தொடரானது 2009 இல் முதன்முதலில் நடைபெற்றது.
ஏப்ரல் 2018 இல், ஐ.சி.சி அதன் அனைத்து நாடுகளுக்கும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடுவதற்கான அதிகாரத்தினை வழங்கியது. எனவே, 1 ஜூலை 2018 க்குப் பிறகு இரண்டு சர்வதேச அணிகளுக்கு இடையே விளையாடும் இருபது20 போட்டிகளும் சர்வதேச போட்டிகளாக கருதப்பட்டன. [5]
ஏப்ரல் 2018 இல், ஐ.சி.சி அதன் அனைத்து நாடுகளுக்கும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடுவதற்கான அதிகாரத்தினை வழங்கியது. [6]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)