பெண்டாங் (P011) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Pendang (P011) Federal Constituency in Kedah | |
![]() கெடா மாநிலத்தில் பெண்டாங் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | பெண்டாங் மாவட்டம்; கெடா |
வாக்காளர் தொகுதி | பெண்டாங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெண்டாங் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | ![]() |
மக்களவை உறுப்பினர் | அவாங் அசிம் (Awang Hashim) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 94,547[1][2] |
தொகுதி பரப்பளவு | 629 ச.கி.மீ[3] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
பெண்டாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pendang; ஆங்கிலம்: Pendang Federal Constituency; சீனம்: 彭当联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், பெண்டாங் மாவட்டத்தில் (Pendang District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P011) ஆகும்.[4]
பெண்டாங் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1986-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பெண்டாங் தொகுதி 44 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[5]
பெண்டாங் மாவட்டம் (Pendang District) கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார்; இந்த மாவட்டத்திற்கு மிக அருகில் உள்ளது.
கெடா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு வடமேற்கே 103 கி.மீ. தொலைவில், கெடா மாநிலத் தலைநகரமான அலோர் ஸ்டார் (Alor Setar) நகரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில்; தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது.
வரலாற்று ரீதியாக, தாய்லாந்திற்கு விளைப் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் யானைகளை இனப்பெருக்கம் (Elephants Breeding Grounds) செய்வதற்கான மிகப்பெரிய இடமாக பெண்டாங் இருந்தது.
பெண்டாங் முன்பு அலோர் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருந்தது. பிப்ரவரி 1975-இல் சொந்த மாவட்டமாக மாறியது.
பெண்டாங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
உலு மூடா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
7-ஆவது | 1986–1990 | ஒசுமான் அப்துல் (Othman Abdul) |
பாரிசான் (அம்னோ) |
8-ஆவது | 1990–1995 | ||
9-ஆவது | 1995–1999 | ||
10-ஆவது | 1999–2002 | பாட்சில் நூர் (Fadzil Noor) |
பாஸ் |
2002–2004 | ஒசுமான் அப்துல் (Othman Abdul) |
பாரிசான் (அம்னோ) | |
11-ஆவது | 2004–2008 | முகமட் அயாத்தி (Mohd Hayati Othman) |
பாஸ் |
12-ஆவது | 2008–2013 | ||
13-ஆவது | 2013–2018 | ஒசுமான் அப்துல் (Othman Abdul) |
பாரிசான் (அம்னோ) |
14-ஆவது | 2018–2020 | அவாங் அசீம் (Awang Hashim) |
பாஸ் |
2020–2022 | பெரிக்காத்தான் (பாஸ்) | ||
15-ஆவது | 2022 – தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
94,547 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
76,381 | 79.95% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
75,594 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
137 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
650 | - |
பெரும்பான்மை (Majority) |
31,289 | 41.39% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் | (%) | |
---|---|---|---|---|
அவாங் அசிம் (Awang Hashim) |
பெரிக்காத்தான் (PN) | 49,008 | 64.83% | |
சுராயா யாக்கோப் (Suraya Yaacob) |
பாரிசான் (BN) | 17,719 | 23.44% | |
சுல்கிப்லி முகமது (Zulkifly Mohamad) |
பாக்காத்தான் (PH) | 8,058 | 10.66% | |
அப்துல் ரசீது இயூப் (Abdul Rashid Yub) |
உள்நாட்டு போராளிகள் கட்சி (GTA) | 809 | 1.07% |
எண். | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N18 | தொக்காய் (Tokai) |
முகமது அயாத்தி ஒசுமான் (Mohd Hayati Othman) |
பெரிக்காத்தான் (பி.என்) |
N19 | சுங்கை தியாங் (Sungai Tiang) |
சுராயா யாக்கூப் (Suraya Yaacob) |
பாரிசான் (அம்னோ) |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)