19 ஆம் நூற்றாண்டிலிருந்து, இயக்கத்தின் ஒவ்வொரு " பெண்ணிய அலைகளிலும்" பெண்ணியத்திற்கான குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் அரசியல் செயல்பாடுகளில் ஆண்களும் குறிப்பிடத்தக்க அளவில் பங்கெடுத்துள்ளனர்.
பார்க்கர் பில்ஸ்பரி செப்டம்பர் 22, 1809 இல் ஆமில்டனில் பிறந்தார். அவரது பெற்றோர் ஆலிவர் பில்ஸ்பரி மற்றும் அன்னா ஸ்மித் ஆவர். இவர் ஜூலை 7, 1898 அன்று கான்கார்ட், NH இல் இறந்தார். இவர் சிறியவராக இருந்தபோது, 1838 இல் பட்டம் பெற கில்மாண்டன் இறையியல் கருத்தரங்கிற்குச் சென்றார். அதற்கு முன்னதாக பள்ளிப் படிப்பினை மாவட்டப் பள்ளியில் கற்றார். ஒரு வருடம் கழித்து இவர் லூடன், NH இல் உள்ள சபை தேவாலயத்தில் அமைச்சரானார். பின்னர், இவர் சாரா எச். சார்ஜெண்ட் என்பவரை மணந்தார். இந்தத் தம்பதிக்கு ஹெலன் பில்ஸ்பரி எனும் ஒரு குழந்தை உள்ளது. இவர் மாசசூசெட்சில் பெண் அடிமை ஒழிப்புவாதி மற்றும் பெண் வாக்குரிமை அமைப்பின் தலைவரானார் . [1] இவரது அடிமைத்தனத்திற்கு எதிரான அப்போஸ்தலர்களின் செயல்களானது நியூ இங்கிலாந்து ஒழிப்பு இயக்கத்தின் வரலாற்றில் முக்கியப் பங்காற்றியது. [2]
பார்க்கர் பில்ஸ்பரி மற்றும் பிற ஒழிப்புவாத ஆண்கள் பெண்ணியத்திற்கு ஆதரவான கருத்துக்களைக் கூறினர் . மேலும் அவர்கள தங்களை வெளிப்படையாக பெண்ணியவாதிகள் என அடையாளம் காட்டினர். அவர்கள் தங்களது செல்வாக்கினைப் பயன்படுத்தி பெண்கள் மற்றும் அடிமைகளின் உரிமைகளை பெற்றுத்தருவதற்காக பங்களித்து வருகின்றனர். [3] [4]
1865 ஆம் ஆண்டில் நியூ ஹாம்ப்ஷயர் பெண்ணிய அமெரிக்க சம உரிமை சங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்க பில்ஸ்பரி உதவினார். மேலும் இவர் அந்த அமைப்பின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 1868 மற்றும் 1869 இல், எலிசபெத் கேடி ஸ்டாண்டனுடன் தெ ரெவல்யூசன் எனும் இதழில் தொகுத்தல் பணியினை மேற்கொண்டார். [5]
பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில், பிரான்சுவாஸ் பவுலின் டி லா பாரே, டெனிஸ் டிடெரோட், பால் ஹென்றி த்ரி ஹோல்பாக், மற்றும் சார்லஸ் லூயிஸ் டி மான்டெஸ்கியூ உட்பட பெரும்பான்மையான பெண்ணிய சார்பு எழுத்தாளர்கள் பிரான்சிலில் பெண்ணிய முன்னேற்த்திற்காக பங்களித்தனர். [6] மான்டெஸ்கியூ எனும் எழுத்தாளர் தனது படைப்புகளில் ஆண் சர்வாதிகாரத்தினை எதிர்க்கும் வகையில் தங்களது பெண் கதாப்பாத்திரங்களை வடிவமைத்துள்ளனர். பெர்சியன் லட்டர்ஸ் எனும் கதையில் ரோக்சனா எனும் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.18 ஆம் நூற்றாண்டில் ஆண் தத்துவவாதிகள் மனித உரிமைகள் பிரச்சினைகளினால் ஈர்க்கப்பட்டனர், மேலும் மார்க்விஸ் டி காண்டோர்செட் போன்ற ஆண்கள் பெண் கல்வியை ஊக்குவித்தனர். ஜெர்மி பெந்தம் போன்ற தாராளவாதிகள், பெண்களுக்கு எல்லா வகையிலும் சம உரிமைகளை கோரினர், ஏனெனில் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பெரும்பான்மையான மக்கள் நம்பினர். [7]
19 ஆம் நூற்றாண்டில், பெண்கள் தங்களது உரிமைகளுக்காக போராடுவது பற்றிய போதிய விழிப்புணர்வு கொண்டிருந்தனர். பிரித்தானிய சட்ட வரலாற்றாசிரியர் சர் ஹென்றி மைனே தனது ஏன்சியன்ட் லா (1861) என்பதில் ஆணாதிக்கத்தின் தவிர்க்க முடியாத தன்மையை விமர்சித்தார். [8] 1866 ஆம் ஆண்டில், தெ சப்ஜக்சன் ஆஃப் உமன் என்பதனை எழுதிய ஜான் ஸ்டூவர்ட் மில் என்பவர் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒரு மனுவை அளித்தார், அதில் 1867 சீர்திருத்த மசோதாவினை அம்ல்படுத்துமாறு அதில் கோரியிருந்தார். இவர் திருமணமான பெண்கள் குறித்த சிக்கல்களைக் கலைவதில் அதிக கவனம் செலுத்தினார்.