பெத்தோங் Betong Town Bandar Betong | |
---|---|
ஆள்கூறுகள்: 1°24′0″N 111°31′0″E / 1.40000°N 111.51667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | பெத்தோங் பிரிவு |
மாவட்டங்கள் | பெத்தோங் |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,62,537 |
பெத்தோங் (மலாய் மொழி: Bandar Betong; ஆங்கிலம்: Betong Town) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் பெத்தோங் பிரிவு; பெத்தோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் முன்பு செரி அமான் மாவட்டத்தின் கீழ் இருந்தது.
4,180 கி.மீ.2 பரப்பளவைக் கொண்ட பெத்தோங் நகரம்; பெத்தோங் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான பாடாங் லுபார் ஆறு, பாடாங் சரிபாஸ் ஆறு மற்றும் பாடாங் கெலகா ஆறு ஆகிய மூன்று ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
பெத்தோங் பகுதியின் வளமான வரலாறு, விரைவான வளர்ச்சி; மற்றும் சரவாக்கின் பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பு ஆகியவற்றை மதிப்பளிக்கும் வகையில், 2002-ஆம் ஆண்டில் பிரிவு தகுதியைப் பெற்றது.
பின்னர் இது நிர்வாகப் பிரிவு மையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. பெத்தோங் நிர்வாகப் பகுதிகளில் சரதோக்கு மாவட்டம், பெத்தோங் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களும் அடங்கும்.
2020 மக்கள் தொகை கணக்கெடுப்பில், பெத்தோங்கின் மக்கள் தொகை 162,537 ஆகும்.
பெரும்பான்மையான மக்கள் இபான் (109,834) இனத்தவர்கள் ஆகும். அடுத்த பெரிய இனக்குழுக்களாக சீனர் (35,706), மலாயர் (16,028), பிடாயூ (182), மெலனாவு (379) மற்றும் கெலாபிட் (408) உள்ளனர்.
பெத்தோங்கின் முக்கிய பொருளாதார அமைப்பு வேளாண்மை மற்றும் மீன்பிடித்தலை மையமாகக் கொண்டுள்ளன. பெரும்பாலான சிறுதொழில் வணிகங்கள் குடும்பம் சார்ந்த வணிகங்களாக உள்ளன.
பெத்தோங் நகரம் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமான மழை பெய்யும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், பெத்தோங் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 30.2 (86.4) |
30.4 (86.7) |
31.3 (88.3) |
32.0 (89.6) |
32.4 (90.3) |
32.3 (90.1) |
32.1 (89.8) |
32.0 (89.6) |
31.9 (89.4) |
31.7 (89.1) |
31.4 (88.5) |
30.8 (87.4) |
31.54 (88.78) |
தினசரி சராசரி °C (°F) | 26.3 (79.3) |
26.4 (79.5) |
26.9 (80.4) |
27.3 (81.1) |
27.7 (81.9) |
27.5 (81.5) |
27.2 (81) |
27.1 (80.8) |
27.2 (81) |
27.1 (80.8) |
26.9 (80.4) |
26.6 (79.9) |
27.02 (80.63) |
தாழ் சராசரி °C (°F) | 22.4 (72.3) |
22.4 (72.3) |
22.6 (72.7) |
22.7 (72.9) |
23.1 (73.6) |
22.7 (72.9) |
22.3 (72.1) |
22.3 (72.1) |
22.5 (72.5) |
22.5 (72.5) |
22.5 (72.5) |
22.4 (72.3) |
22.53 (72.56) |
மழைப்பொழிவுmm (inches) | 330 (12.99) |
259 (10.2) |
286 (11.26) |
270 (10.63) |
271 (10.67) |
192 (7.56) |
170 (6.69) |
264 (10.39) |
270 (10.63) |
287 (11.3) |
323 (12.72) |
402 (15.83) |
3,324 (130.87) |
ஆதாரம்: Climate-Data.org[1] |