பெந்தா Benta | |
---|---|
ஆள்கூறுகள்: 4°01′N 101°58′E / 4.017°N 101.967°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 28xxx |
தொலைபேசி | +60-9-2 (தரைவழித் தொடர்பு) |
வாகனப் பதிவெண்கள் | C |
இணையதளம் | http://www.mdlipis.gov.my/en |
பெந்தா என்பது (மலாய்: Benta; ஆங்கிலம்: Benta; சீனம்: 本塔 மலேசியா, பகாங் மாநிலத்தில், கோலா லிப்பிஸ் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு நகரம். ரவுப் மாவட்டத்தின் எல்லையில், லிப்பிஸ் ஆற்றின் கரையில் இந்த நகரம் அமைந்து உள்ளது.
கோலாலம்பூர் மாநகரில் இருந்து கிளாந்தான்; திராங்கானு மாநிலங்களின் நகரங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செல்பவர்களுக்கு, இந்த நகரம் ஓய்வு அளிக்கும் இடமாக விளங்கி வருகிறது. பெந்தா பகுதிகளில் தமிழர்களின் நடமாட்டம் கணிசமான அளவிற்கு உள்ளது.
2021 மார்ச் மாதம் பகாங் மாநிலத்தில் கடும் மழை. பெந்தா தோட்டம்; புடு தோட்டம்; ஆகிய இரு தோட்டங்களில் பணிபுரிந்த 32 தமிழர் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டனர். அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப் பட்டன.[1]
பெந்தாவில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. இரு பள்ளிகளிலும் 59 மாணவர்கள் பயில்கிறார்கள்.
1. புடு தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Budu Benta). இந்தப் பள்ளியில் 11 மாணவர்கள் பயில்கிறார்கள். 8 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
2. பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Benta). இந்தப் பள்ளியில் 48 மாணவர்கள் பயில்கிறார்கள். 10 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.[2]
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு இந்தியப் பெற்றோர்கள் முனைப்புக் காட்ட வேண்டும். தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்ற தாரக மந்திரத்தை மனதில் நிறுத்த வேண்டும். ஒவ்வொரு இந்தியப் பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை தமிழ் பள்ளியில் சேர்க்க வேண்டும்.
நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பெந்தா தோட்டச் சமூகச் சேவையாளர் ராஜா ‘தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு‘ எனும் தாள் ஒட்டியைத் தன் காரில் ஒட்டிக் கொண்டு பிரசாரம் செய்து வருகின்றார்.[3]