பெனகல் சிவராவ்

பெனகல் சிவராவ்
இந்தியா நாடாளுமன்றம்
தெற்கு கனரா மக்களவைத் தொகுதி (பின்னர் மங்களூர், தற்போது தட்சிண கன்னட மக்களவைத் தொகுதி எனப் பெயரிடப்பட்டுள்ளது)
பதவியில்
1952–1957
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்கே. ஆர். ஆச்சார் , மங்களூர் மக்களவை தொகுதி உறுப்பினர்,
பெரும்பான்மை8841
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 பிப்ரவரி 1891
மங்களூர், மதராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது கர்நாடக)
இறப்பு15 திசம்பர் 1975
தில்லி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கிட்டி வெர்ஸ்டாண்டிக்
வாழிடம்(s)இலட்சுமி சதன் குடில், கத்ரி கோயில் சாலை, மங்களூர், தென் கன்னட மாவட்டம்
முன்னாள் கல்லூரிமாநிலக் கல்லூரி, சென்னை
வேலைஇதழியலாளர்
தொழில்அரசியல்வாதி

பெனகல் சிவராவ் (Benegal Shiva Rao) (26 பிப்ரவரி 1891 - 15 திசம்பர் 1975) ஓர் இந்திய பத்திரிகையாளரும் அரசியல்வாதியுமாவார். இவர், இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினராகவும், முதல் மக்களவையில் தென் கனரா தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகவும் இருந்தார் (பின்னர் மங்களூர், தற்போது தட்சிண கன்னட மக்களவைத் தொகுதி எனப் பெயரிடப்பட்டுள்ளது).[1]

இவர் தி இந்து, தி கார்டியன் ஆகியவற்றில் நிருபராகவும் பின்னர் இருந்தார். இவர், 1957 - 1960 முதல் மாநிலங்களவையில் உறுப்பினராகவும் இருந்தார்.[2] இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கியது.[3]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சிவராவ் பிப்ரவரி 26, 1891[1] அன்று மங்களூரில் ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பெனகல் ராகவேந்திர ராவ், புகழ்பெற்ற மருத்துவ நிபுணராவார். இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பெனகல் நரசிங் ராவ், பெனகல் ராமராவ் இருவரும் இவரது சகோதரர்கள் ஆவர்.

இவர் தொழிலாளர் இயக்கத்தில் சேர்ந்து. இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் துணைத் தலைவராக உயர்ந்தார். 1929ஆம் ஆண்டில் இவர் ஆஸ்திரியரான கிட்டி வெர்ஸ்டாண்டிக் என்பவரை மணந்தார். இவரது வாழ்க்கையின் ஆரம்பத்தில், பிரம்மஞான சபையையும் அதன் தலைவர் அன்னி பெசண்ட்டையும் பின்பற்றினார்.

இவர், தி இந்து நாளிதழிலும், தி கார்டியனிலும் நிருபராக இருந்தார். "இந்திய அரசியலமைப்பை உருவாக்குதல்" (ஆறு தொகுதிகளில், 1968) என்ற படைப்புகளுக்கு இவர் நன்கு அறியப்பட்டவர். இவர் காந்தியின் தீவிர அபிமானியாக இருந்தார். ஆனால் தேசிய இயக்கத்திற்கான அவரது முக்கியத்துவத்தை விமர்சித்தவர்களில் இவரும் ஒருவர். இவரது புறநிலை மற்றும் ஆழமான பகுப்பாய்வு காரணமாக ஜவகர்லால் நேரு, காந்தி, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களுக்கு இவரை மிகவும் பிடித்திருந்தது.

பிற பணிகள்

[தொகு]

சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் இவரது பங்களிப்பு சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்ந்தது. ஐக்கிய நாடுகள் அவையிலும், பன்னாட்டு தொழிலாளர் அமைப்பிலும் பிரதிநிதியாகத் தொடர்ந்தார். அங்கு இவர் விஜயலட்சுமி பண்டித், ஜெகசீவன்ராம் ஆகியோருடன் பணியாற்றினார். இவர், 1952–57 வரை மக்களவையிலும், 1957 – 1960 வரை மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு, இவர் பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். மேலும், தனது ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினார். இவர் தனது சகோதரர் பெனகல் நரசிங் ராவின் ஆவணங்களை இந்தியாவின் அரசியலமைப்பின் தயாரிப்பு (1960) (India's Constitution in the Making) (1960) என்ற பெயரில் பதிப்பித்துள்ளார்.

1947, 1948, 1949, 1950 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பொதுச் சபைக் கூட்டங்களுக்கு இந்தியாவின் பிரதிநிதியாக இருந்து வழிநடத்தினார்.

இறப்பு

[தொகு]

15 திசம்பர் 1975 இல், இவர் புதுதில்லியில் இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "First Lok Sabha Members Bioprofile". Lok Sabha. Archived from the original on 13 April 2014. பார்க்கப்பட்ட நாள் 5 March 2012.
  2. "Alphabetical List Of All Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha. Archived from the original on 17 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 3 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.