சர். பி. என். ராவ் | |
---|---|
![]() இந்திய அஞ்சல் துறை 1988-இல் வெளியிட்ட பி. என். ராவ் அஞ்சல் தலை | |
நீதிபதி, அனைத்துலக நீதிமன்றம்[1] In 1988, On the occasion of his birth centenary, the Govt. of India issued a postage stamp in honor of B.N. Rau.[2] | |
பதவியில் 1952–1953 | |
முன்னையவர் | சார்லஸ் டி விஸ்சேர் |
பின்னவர் | முகமது சபருல்லா கான் |
தலைவர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை | |
பதவியில் சூன் 1951 | |
முதலமைச்சர், ஜம்மு காஷ்மீர் இராச்சியம் | |
பதவியில் 1944–1945 | |
முன்னையவர் | கைலாஷ் நாத் ஹக்சர் |
பின்னவர் | இராம் சந்திர |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மங்களூரு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா, தறகால கர்நாடகா | 26 பெப்ரவரி 1887
இறப்பு | 30 நவம்பர் 1953 சூரிக்கு, சுவிட்சர்லாந்து | (அகவை 66)
பணி | இந்தியக் குடிமைப் பணி அதிகாரி, சட்ட நிபுணர், அரசியலமைப்புச் சட்ட நிபுணர் |
பெனகல் நரசிங் ராவ் (சுருக்கமாக பி. என். ராவ் (Sir Benegal Narsing Rau), (26 பிப்ரவரி 1887 - 30 நவம்பர் 1953) பிரிதானிய இந்திய அரசின் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும், சட்ட நிபுனரும், அனைத்துலக நீதிமன்றத்தில் நீதியரசராகவும், அரசியல் ராஜதந்தரியாகவும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் தலைவராகவும் இருந்தவர்.[3], இருந்தவர். மேலும் இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் ஒரு உறுப்பினர் ஆவார்[4][5][6]. மேலும் இவர் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்த்ன் முதலமைச்சராகவும், ஐக்கிய இராச்சியத்தில் இந்திய தூதராக இருந்தவர். இவரது சகோதரர் பெனகல் ராமா ராவ் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்தார். மற்றொரு சகோதரர் பி. சிவ ராவ் இந்திய அரசியல்வாதி ஆவார்.