பெனான் மொழி Punan-Nibong Language Bahasa Penan | |
---|---|
நாடு(கள்) | மலேசியா புரூணை |
பிராந்தியம் | சரவாக், போர்னியோ |
இனம் | பெனான் மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 13455 (2007–2011) |
ஆஸ்திரோனீசிய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | Either: pez — கிழக்கு பெனான் pne — மேற்கு பெனான் |
மொழிக் குறிப்பு | east2485 (கிழக்கு)[1] west2563 (மேற்கு)[2] |
பெனான் மொழி, (மலாய்: Bahasa Penan; ஆங்கிலம்: Penan Language); என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள பெனான் மக்களின் (Penan People) பேச்சு வழக்கினைச் சார்ந்த மொழியாகும்.[3]
இந்த மொழி கென்னியா மொழிகளுடன் தொடர்புடையது என அறியப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி பெனான் மொழியை 13,455 பேர் மட்டுமே பயன்படுத்துவதாக அறியப்படுகிறது.
பெனான் மக்கள் என்பவர்கள் போர்னியோ சரவாக்; புரூணை ஆகிய நிலப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆகும்.
புரூணையில் ஒரே ஒரு சிறிய சமூகமாக இருந்தாலும்; அவர்களில் பாதி பேர் இசுலாத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.[1] வேட்டையாடுதல்; வனப் பொருள்கள் சேகரித்தல்; ஆகியவற்றை முதன்மையாகக் கொண்ட பழங்குடி மக்களில் எஞ்சியிருக்கும் கடைசி மக்களில் பெனான் மக்களும் ஒரு தொகுதியினர்.[4]