பெனாம்பாங் (P174) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Penampang (P174) Federal Constituency in Sabah | |
பெனாம்பாங் மக்களவைத் தொகுதி (P174 Penampang) | |
மாவட்டம் | கோத்தா கினபாலு மாவட்டம்; பெனாம்பாங் மாவட்டம் மேற்கு கரை பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 77,214 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பெனாம்பாங் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெனாம்பாங் |
பரப்பளவு | 492 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1966 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | இவோன் பெனடிக் (Ewon Benedick) |
மக்கள் தொகை | 178,499 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பெனாம்பாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Penampang; ஆங்கிலம்: Penampang Federal Constituency; சீனம்: 联邦选区的横截面) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவு, கோத்தா கினபாலு மாவட்டம்; பெனாம்பாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P174) ஆகும்.[5]
பெனாம்பாங் மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து பெனாம்பாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
பெனாம்பாங் மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் பெனாம்பாங் நகரம். சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் பெனாம்பாங் மாவட்டமும் ஒன்றாகும்.
1978-இல் பெனாம்பாங் மாவட்ட மன்றம் உருவாவதற்கு முன்பு, ஜெசல்டன் கிராமப்புற மாவட்ட மன்றம் (Jesselton Rural District Council) என அறியப்பட்டது. அந்த ஜெசல்டன் கிராமப்புற மாவட்ட மன்றம்; அப்போதைய பெனாம்பாங் துணை மாவட்டத்தில் இருந்த புத்தாத்தான், லோக் காவி, டெலிபோக் நகரம், கம்போங் லிக்காசு, தாமான் போ சாங், தாமான் இசுடீபன் வரையிலான பகுதிகளை உள்ளடக்கி இருந்தது.
வரலாற்று அடிப்படையில், பெனாம்பாங்கின் முதன்மைப் பொருளாதார நடவடிக்கை நெல் வேளாண்மை மற்றும் பிற வேளாண் செயல்பாடுகள் ஆகும். அண்மைய ஆண்டுகளில், பொருளாதார உயர்வு காணப்படுகிறது. இந்த மாவட்டம் கோத்தா கினபாலுவிற்கு அருகில் இருப்பதால், பொருளாதாரத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் விரைவான வளர்ச்சியைக் காண்கிறது.
இருப்பினும், பாரம்பரிய வேளாண் நடவடிக்கைகளில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. பாரம்பரியமாக ஈர நெல் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் நிலங்களை விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்ட போதிலும், வணிக மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக அதிகளவில் அந்த நிலங்கள் மறைமுகமாக விற்கப் படுகின்றன. [7]
பெனாம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பெனாம்பாங் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[9] | |||
3-ஆவது மக்களவை | P110 | 1971-1973 | ஜேம்சு இசுடீபன் திபோக் (James Stephen Tibok) |
அசுனோ |
1973-1974 | பாரிசான் நேசனல் (அசுனோ) | |||
4-ஆவது மக்களவை | P122 | 1974-1978 | ||
5-ஆவது மக்களவை | 1978-1982 | கிளாரன்ஸ் எலோங் மன்சுல் (Clarence Elong Mansul) |
பாரிசான் நேசனல் (சபா மக்கள் ஐக்கிய முன்னணி) (BERJAYA) | |
6-ஆவது மக்களவை | 1982-1986 | |||
7-ஆவது மக்களவை | P143 | 1986-1990 | பர்னர்ட் கிலுக் டொம்போக் (Bernard Giluk Dompok) |
பாரிசான் நேசனல் (ஐக்கிய சபா கட்சி) (PBS) |
8-ஆவது மக்களவை | 1990-1995 | காகாசான் ராக்யாட் (ஐக்கிய சபா கட்சி) | ||
9-ஆவது மக்களவை | P152 | 1995-1999 | பால் நோயின்தியன் (Paul Nointien) | |
10-ஆவது மக்களவை | 1999-2004 | பிலிப் பெனடிக் லசிம்பாங் (Philip Benedict Lasimbang) |
பாரிசான் நேசனல் (உப்கோ) | |
11-ஆவது மக்களவை | P174 | 2004-2008 | டொனால்டு பீட்டர் மொசுந்தின் (Donald Peter Mojuntin) | |
12-ஆவது மக்களவை | 2008-2013 | பர்னர்ட் கிலுக் டொம்போக் (Bernard Giluk Dompok) | ||
13-ஆவது மக்களவை | 2013-2016 | இக்னேசியஸ் டாரல் லெய்கிங் (Ignatius Darell Leiking) |
பாக்காத்தான் ராக்யாட் (மக்கள் நீதிக் கட்சி) | |
2016-2018 | வாரிசான் | |||
14-ஆவது மக்களவை | 2018-2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | இவோன் பெனடிக் (Ewon Benedick) |
பாக்காத்தான் அரப்பான் (உப்கோ) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
இவோன் பெனடிக் (Ewon Benedick) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 29,066 | 57.30 | 57.30 | |
இக்னேசியஸ் டாரல் லெய்கிங் (Ignatius Darell Leiking) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 14,656 | 28.89 | 46.43 ▼ | |
கென்னி சுவா தெக் கோ (Kenny Chua Teck Ho) | சபா மக்கள் கூட்டணி (GRS) | 6,719 | 13.24 | 13.24 | |
ரிச்சர்ட் ஜிம்மி (Richard Jimmy) | சுயேச்சை (Independent) | 289 | 0.57 | 0.57 | |
மொத்தம் | 50,730 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 50,730 | 98.89 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 571 | 1.11 | |||
மொத்த வாக்குகள் | 51,301 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 77,214 | 65.70 | 16.47 ▼ | ||
Majority | 14,410 | 28.41 | 26.04 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)