பெனு கோபால் பங்கூர்

பெனு கோபால் பங்கூர்
பிறப்பு1931 (அகவை 93–94)
தேசியம்இந்தியன்
கல்விகொல்கத்தா பல்கலைக்கழகம்
பணிவர்த்தகர்
சொத்து மதிப்புUS$ 8.4 பில்லியன் (சூன் 2021)[1]
பட்டம்தலைவர் , ஸ்ரீ சிமென்ட்
பிள்ளைகள்2, ஹரி மோகன் பங்கூர் உட்பட

பெனு கோபால் பங்கூர் (Benu Gopal Bangur) (பிறப்பு 1931) ஒரு இந்திய கோடீஸ்வர தொழிலதிபரும் ஸ்ரீ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

பங்கூர் 1931 இல் மார்வாரி வணிகக் குடும்பத்தில் பிறந்தார். பங்கூர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.

தொழில்

[தொகு]

அவரது தாத்தா, கல்கத்தா பங்குத் தரகரான முங்கி ராம் பங்கூர் மற்றும் அவரது சகோதரர் ராம் கூவர் பங்கூர் ஆகியோர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பங்கூர் வணிக சாம்ராஜ்யத்தைத் தொடங்கினர். 1991 ஆம் ஆண்டில், இந்த வணிகம் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டது. அக்குழுக்கள் பால்பத்ரா தாஸ் பாங்கூர், நிவாஸ் பங்கூர், குமார் பங்கூர், பெனு கோபால் பங்கூர் (முங்கி ராமின் பேரன்கள் அனைவரும்) மற்றும் லக்ஷ்மி நிவாஸ் பங்கூர் (ராம் கூவரின் பேரன்) ஆகியோரின் தலைமையில் இயங்கின.

போர்ப்ஸின் கூற்றுப்படி, அக்டோபர் 2019 நிலவரப்படி பங்கூரின் சொத்தின் நிகர மதிப்பு 6.0 பில்லியன் டாலர்கள். 2020 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸின் இந்திய பில்லியனர் பட்டியலில் அவர் 7.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 14 வது இடத்தைப் பிடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பங்கூர் இரண்டு குழந்தைகளுடன் விதவையாகி கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.  அவரது மகன் ஹரி மோகன் பங்கூர் 1990 முதல் ஸ்ரீ சிமென்ட்டை நடத்தி வருகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Benu Gopal Bangur". Forbes. பார்க்கப்பட்ட நாள் 13 April 2021.