பென்யாமின் | |
---|---|
2018 இல் பென்யாமின் | |
பிறப்பு | பென்னி டேனியல் 1971 (வயது 53) குளநாடா, நெட்டூர், பத்தனம்திட்டா, கேரளம், இந்தியா |
புனைபெயர் | பென்யாமின் |
மொழி | மலையாளம் |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆடு ஜீவிதம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
பென்னி டேனியல் (Benny Daniel ; பிறப்பு 1971), பென்யாமின் ( Benyamin ) என்ற புனைப்பெயரால் நன்கு அறியப்பட்ட இவர், கேரளாவைச் சேர்ந்த மலையாளத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர் ஆவார். சிறுகதைகள் முதல் புதினங்கள் மற்றும் நினைவுக் குறிப்புகள் வரை பல்வேறு வகைகளில் சுமார் முப்பது புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது ஆடு ஜீவிதம் எனற நூலுக்காக, இவர் அபுதாபி சக்தி விருது, கேரள சாகித்ய அகாதமி விருது மற்றும் ஜேசிபி பரிசு ஆகியவற்றை வென்றுள்ளார். மேலும் மான் ஆசிய இலக்கியப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவரது மாந்தளிரிலே 20 கம்யூனிஸ்ட் வர்ஷங்கள் என்ற புத்தகம் 2021 ஆம் ஆண்டு வயலார் விருதைப் பெற்றது.
பென்யாமின் 1971 ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் கேரளாவின் பந்தளம் அருகே உள்ள குளநாடாவில் உள்ள நெட்டூரில் பிறந்தார். 1992 முதல் 2013 வரை பகுரைனில் வசித்து வந்தார்.[1] பின்னர் கேரளா திரும்பினார்.
இவரது மிகவும் பிரபலமான புத்தகமான ஆடு ஜீவிதம் , சவூதி அரேபியாவில் பணி செய்த ஒரு இந்திய தொழிலாளியின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. இது கேரளப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், புதுவைப் பல்கலைக்கழகம் போன்றவற்றிலும், கேரள மாநிலப் பாடத்திட்டத்திற்கான 10ஆம் வகுப்பு ஆகியவற்றிலும் பாடநூலாகப் பயன்படுத்தப்படுகிறது. [2]
இவரது, முல்லப்பூ நிறமுள்ள பகளுகள் (மல்லிகை நாட்கள்)என்ற நூல் சமீரா பர்வின் என்ற ஒரு இளம் பெண், மத்திய கிழக்கு நகரத்திற்குச் சென்று ஒரு புரட்சியின் நடுவில் தன்னைக் கண்டுபிடிக்கும் கதையைச் சொல்கிறது. இது டிசம்பர் 2010 இல் தோன்றி ஜனவரி 2011 இல் அடக்கப்பட்ட துனீசியப் புரட்சியைச் சுற்றி வருகிறது. [3] இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, நாட்டின் செழுமையான இலக்கிய விருதான இலக்கியத்திற்கான தொடக்க ஜேசிபி பரிசை வென்றது. நடுவர் மன்றத் தலைவர் விவேக் ஷான்பாக் இதனை "புத்திசாலித்தனம் மற்றும் தீவிரம்" என்று அழைத்தார். [4] [5]
தரகனின் கிரந்தவரி ( தரகனின் நிகழ்ச்சிக்கோவை) கதை பாணியிலும், தயாரிப்பு மற்றும் வெளியீட்டிலும் ஒரு தனித்துவமான பரிசோதனையாகும். கதை மாத்து தரகனின் வாழ்க்கையைச் சுற்றி 120 சம்பவங்கள் மூலம் விவரிக்கப்படுகிறது. புத்தகம் 120 தளர்வான பக்கங்களாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வாசகர்களுக்கு கதையை தேர்ந்தெடுப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் ஒவ்வொரு பிரதியும் தனித்துவமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதியும் நூலைப் படிக்கக்கூடிய பல சாத்தியக்கூறுகளின் தனித்துவமான வரிசைமாற்றம் ஆகும். [6] [7]
2023 இல், பென்யாமின், கிறிஸ்டி என்ற மலையாளத் திரைப்படத்தை எழுத்தாளர் ஜி. ஆர். இந்துகோபனுடன் இணைந்து எழுதினார். இது திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமாகும். படத்தில் இவரும் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார். [8]