10 கி.மீ. தொலைவில் இருந்து பெமங்கில் தீவு | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென் சீனக் கடல் |
ஆள்கூறுகள் | 2°34′52″N 104°19′37″E / 2.58111°N 104.32694°E |
தீவுக்கூட்டம் | தீபகற்ப மலேசியா; மலேசியா |
மொத்தத் தீவுகள் | 1 |
பரப்பளவு | 8.508 km2 (3.285 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 223 m (732 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 34 (2020) |
அடர்த்தி | 3.996 /km2 (10.35 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் குறியீடு | 86800 |
பெமாங்கில் தீவு (மலாய்: Pulau Pemanggil; ஆங்கிலம்:Pemanggil Island; சீனம்: 柏芒吉岛) என்பது மலேசியா, ஜொகூர், மெர்சிங் மாவட்டம், தென் சீனக் கடலில் உள்ள ஒரு தீவு.[1] ஜொகூர் பாருவின் மேற்குப் பக்கத்திலும், தியோமான் தீவிற்கு தெற்கிலும் அமைந்துள்ளது.[2]
பெமாங்கில் தீவு உண்மையில் ஒரு தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனுடன் மேலும் மூன்று தீவுகள் உள்ளன. அவை: அவுர் தீவு, லாங் தீவு மற்றும் டாயாங் தீவு.
மெர்சிங் நகரில் இருந்து கிழக்கே 45 கிமீ தொலைவில் தென் சீனக் கடலில் அமைந்துள்ள இந்தத் தீவு, ஜொகூர் கடல் பூங்காவின் (Johor Marine Park) ஒரு பகுதியாகும்.[3]
பெமாங்கில் தீவு ஆழ்கடல் மீன்பிடிச் செயல்பாடுகளுக்கும்; மற்றும் மார்லின் வகை மீன்கள்; கானாங்கெளுத்தி மீன்களுக்கும் பெயர் பெற்றது.
இந்தத் தீவின் வெளிப்பகுதியில் ஒரு மலையும்; வடகிழக்கு கடற்கரையில் தெலுக் லாங்காங் எனும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட விரிகுடாவும் உள்ளது. தீவின் மையத்தில், உள்ளூர் மக்கள் புனிதமாகக் கருதும் பத்து புவாவு (Batu Buau) எனும் ஒரு பெரிய பாறையும் உள்ளது.
மெர்சிங் நகரில் இருந்து படகு மூலம் இந்தத் தீவை அணுகலாம்.[4]