பெரா (P090) மலேசிய மக்களவைத் தொகுதி பகாங் | |
---|---|
Bera (P090) Federal Constituency in Pahang | |
பெரா மக்களவைத் தொகுதி (P090 Bera) | |
மாவட்டம் | பெரா மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 77,669 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பெந்தோங் |
முக்கிய நகரங்கள் | பெரா, திரியாங் |
பரப்பளவு | 2,205 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | இசுமாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) |
மக்கள் தொகை | 97,963[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பெரா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bera; ஆங்கிலம்: Bera Federal Constituency; சீனம்: 百乐国会议席) என்பது மலேசியா, பகாங், மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P090) ஆகும்.[5]
பெரா மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து பெந்தோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
பெரா மாவட்டம், பகாங் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் மேற்கில் நெகிரி செம்பிலான் மாநிலம்; தெற்கில் ஜொகூர்; மாநிலம்; எல்லைகளாக உள்ளன. 2,241 கி.மீ² பரப்பளவு கொண்டது.
பெரா மாவட்டத்தின் தலைநகரம் பெரா. இந்த நகரம் முன்பு தெமர்லோ மாவட்டத்தில் இருந்தது. 1992-ஆம் ஆண்டு பெரா மாவட்டம் உருவாக்கப் பட்டது. அதன் பின்னர் பெரா நகரம் இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆனது.
மலேசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான பெரா ஏரி (Lake Bera) இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. 1994 நவம்பர் மாதம் முதல் ராம்சர் உடன்படிக்கையின் கீழ் அந்த ஏரி பாதுகாக்கப் பட்டு வருகிறது.[7]
பெரா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
2003-ஆம் ஆண்டில் பெந்தோங் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P090 | 2004–2008 | இசுமாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
இசுமாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) | பாரிசான் நேசனல் | 31,762 | 53.34 | 9.45 | |
அபாஸ் அவாங் (Abas Awang) | பாக்காத்தான் அரப்பான் | 15,067 | 25.30 | 13.70 ▼ | |
அசுமாவி அருண் (Asmawi Harun) | பெரிக்காத்தான் நேசனல் | 12,719 | 21.36 | 21.36 | |
மொத்தம் | 59,548 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 59,548 | 98.42 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 959 | 1.58 | |||
மொத்த வாக்குகள் | 60,507 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 77,669 | 77.90 | 4.43 ▼ | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)