பெரானாங்

பெரானாங்
Beranang
பெரானாங் நகரம்
பெரானாங் நகரம்
Map
ஆள்கூறுகள்: 2°52′59″N 101°51′59″E / 2.88306°N 101.86639°E / 2.88306; 101.86639
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்உலு லங்காட் மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
43700
தொலைபேசி எண்603-876
போக்குவரத்துப் பதிவெண்கள்N

பெரானாங் (ஆங்கிலம்: Beranang; மலாய்: Mukim Beranang) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் (Hulu Langat District) உள்ள புற நகரப்பகுதி; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். இந்த முக்கிம் செமினி முக்கிம் மற்றும் சிப்பாங் மாவட்டத்திற்கு அருகில் உள்ளது.[1]

இதன் வடக்கே செமினி நகரம்; தெற்கே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்தின் நகரம்; ஆகிய இரு நகரங்கள் உள்ளன. உண்மையிலேயே பெரானாங் நகரம் இரண்டு மாநிலங்களுக்கு இடையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தலையாய பெரானாங் நகரம் சிலாங்கூர் மாநிலத்திலும்; உலு பெரானாங் நகரம் (Ulu Beranang) நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் உள்ளன.

பொது

[தொகு]

குன்றுகள்

[தொகு]

பெரானாங் பகுதியில் 2 குன்றுகளும் ஒரு மலையும் உள்ளன.

  • புக்கிட் தெம்புரோங் குன்று - 400 அடி
  • புக்கிட் பூலோ குன்று - 401 அடி
  • உலு பெரானாங் மலை - 2654 அடி

ஆறுகள்

[தொகு]

பெரானாங்கில் சில ஆறுகள் உள்ளன. அவற்றில் பெரானாங் ஆறு என்பது செமனி ஆற்றின் ஒரு கிளை ஆறு ஆகும். இங்கு காணப்படும் ஆறுகள்:[2]

  • பெரானாங் ஆறு
  • தருண் ஆறு
  • புரோகா ஆறு
  • ஜெய் ஆறு
  • லூமுட் ஆறு
  • பாலாவ் ஆறு

ரப்பர் தோட்டங்கள்

[தொகு]

முன்பு இங்கு பல ரப்பர் தோட்டங்கள் இருந்தன. பின்னர் அவை செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன.

  • பாலாவ் தோட்டம்
  • கிளன்வோரி தோட்டம்
  • கன்னிமாரா தோட்டம்
  • அபாக்கோ தோட்டம்
  • பெனார் தோட்டம்
  • புக்கிட் உங்குல் தோட்டம்

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Beranang is a mid-size place in the region of Selangor in Malaysia with a population of approximately 46,329 people". malaysia.places-in-the-world.com. பார்க்கப்பட்ட நாள் 20 August 2023.
  2. "Rivers in Beranang, Hulu Langat District, Selangor, Malaysia". AllTrails.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 August 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]