![]() | |
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
இரும்பு(3+) எத்தேன்டையோயேட்டு (2:3) | |
வேறு பெயர்கள்
இரும்பு(III) ஆக்சலேட்டு
| |
இனங்காட்டிகள் | |
2944-66-3 (நீரிலி) 166897-40-1 (அறுநீரேற்று) | |
ChemSpider | 147789 |
EC number | 220-951-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 168963 |
| |
பண்புகள் | |
C6Fe2O12 | |
வாய்ப்பாட்டு எடை | 375.747 கி/மோல் |
தோற்றம் | வெளிர் மஞ்சள் திண்மம் (நீரிலி) எலுமிச்சை பச்சை திண்மம் (அறுநீரேற்று) |
மணம் | odorless |
சிறிதளவு கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பெரிக் ஆக்சலேட்டு (Ferric oxalate) என்பது C6Fe2O12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பெரிக் அயனிகளும் ஆக்சலேட்டு ஈந்தணைவிகளும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம், இரும்பு(III) ஆக்சலேட்டு (iron(III) oxalate) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஆக்சாலிக் அமிலத்தின் பெரிக் உப்பான பெரிக் ஆக்சலேட்டு வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. நீரேற்ற வினையின் மூலம் பெரிக் ஆக்சலேட்டை அடர் பச்சை நிற Fe2(C2O4)3·6H2O சேர்மமாக மாற்ற இயலும்.
மற்ற ஆக்சலெட்டுகளைப் போல பெர்ரிக் ஆக்சலேட்டும் தற்காலிக பல் மருத்துவத்தில் பயன்படுத்த ஆராயப்படுகிறது.[1] சிலவகை பற்பசை தயாரிப்புகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் இதன் செயற்படுதிறன் கேள்விக்குறியாகவே கருதப்பட்டு வருகிறது.[2]
கல்லிவகை புகைப்பட அச்சிடும் செயமுறையில் ஒளியுணர் பொருளாக பெரிக் ஆக்சலேட்டு பயன்படுத்தப்படுகிறது.