பெரிய பாம்பே ஜவுளி வேலை நிறுத்தம் (Great Bombay textile strike) மும்பாயில் இடம்பெற்ற பாரிய போராட்டம் ஒன்றாகும். 1982 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று தொழிற்சங்கத் தலைவர் தத்தா சமந்தாவின் கீழ் பம்பாயில் உள்ள ஆலைத் தொழிலாளர்கள் பெரும் ஜவுளி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்திற்கான நோக்கம் போனஸ் மற்றும் ஊதியம் அதிகரிப்பது ஆகும். மும்பையில் உள்ள 50-இற்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் பணிபுரிந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.[1] [2]