பெரிய மனுஷன் | |
---|---|
இயக்கம் | குரு தனபால் |
தயாரிப்பு | ஜி. சீதாலட்சுமி |
கதை | குரு தனபால் |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | டி. சங்கர் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | குரு பிலிம்சு இன்டர்நேசனல் |
வெளியீடு | அக்டோபர் 30, 1997 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
பெரிய மனுஷன் (Periya Manushan) குரு தனபால் இயக்கத்தில் 1997ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், ரவளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். ஜி. சீதாலட்சுமி தயாரித்த இப்படம் 1997 அக்டோபர் 30 அன்று தீபாவளி திருநாளில் வெளியானது.[1][2][3]
இப்படத்தில் சுருதிக்குப் பதிலாக ரவளி நடித்திருந்தார்.[4]
இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். 1997ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர்கள் வாலி, காளிதாசன், பழனி பாரதி ஆகியோர் எழுதியிருந்தனர்.[5]
எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
1 | 'அரப ஈத்தம்பழமே' | மனோ, சித்ரா | 5:25 |
2 | 'வாலபாரி சின்னா' | மனோ, அனுராதா ஸ்ரீராம் | 5:00 |
3 | 'ஹாலிவுட் முதல்' | ஹரிஹரன், சித்ரா | 4:53 |
4 | 'ஓ மாமா' | மனோ, சித்ரா | 4:55 |
5 | 'சோனா சோனா' | தேவா, கே. ஜே. யேசுதாஸ் | 5:23 |