பெரியமேடு மசூதி | |
---|---|
அமைவிடம்: 13°05′05″N 80°16′13″E / 13.08468°N 80.27018°E | |
அமைவிடம் | வேப்பேரி நெடுஞ்சாலை, பெரியமேடு, சென்னை, தமிழ்நாடு |
நிறுவிய ஆண்டு | 1838 |
கட்டிட வடிவமைப்புத் தகவல் |
பெரியமேடு மசூதி என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள வேப்பேரி உயர் சாலையில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசல் ஆகும்.[1][2][3] மசூதிக்கு அது அமைந்துள்ள பெரியமேடு சுற்றுப்புறத்தின் பெயரிடப்பட்டது.
பெரியமேடு மசூதி, 1838-ஆம் ஆண்டு, எருமை மற்றும் மாட்டுத் தோல் (ஆங்கிலம்: Hide) மற்றும் ஆட்டுத் தோல் (ஆங்கிலம்: Skin) வணிகர்களான ஜமால் மொய்தீன் சாகேப் மற்றும் ரோசன் என்.எம்.ஏ கரீம் உமர் வணிகக் குழுமம் ஆகியோரால் கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்த மசூதி இரண்டு முறை மீண்டும் கட்டப்பட்டது. இந்த இடத்தில் ஒரே சமயம் 4000 நபர்கள் வரை தொழுகை நடத்தலாம்.