பெரியாறு அயிரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | திருவாங்கோரியா
|
இனம்: | தி. எலோங்கேட்டா
|
இருசொற் பெயரீடு | |
திருவாங்கோரியா எலோங்கேட்டா பெதியகோடா & கோடெலட், 1994 |
பெரியாறு அயிரை எனும் திருவாங்கோரியா எலோங்கேட்டா (Travancoria elongata) அயிரை மீன் சிற்றினமாகும். மலையாளத்தில் இது நெடும் கல்நக்கி (മലയാളം: നെടും കൽനക്കി) என அழைக்கப்படுகிறது. பெரியாறு அயிரை அழிந்து வரும் ஒரு மீன் சிற்றினமாகும்.[2] நன்னீர் மீன்கள் சாலக்குடி ஆறு மற்றும் பெரியாற்றில் மட்டுமே காணப்படுகின்றன.[3] பாலிடோரிடே (ஆற்று அயிரை) குடும்பத்தினைச் சார்ந்தவை இந்த மீன்கள்.[4] இந்த மீன்கள் 11 சென்டிமீட்டர்கள் (4.3 அங்) நீளம் வரை வளரக்கூடியன. இந்த வகை மீன்களைப் பன்னாட்டுச் சந்தை தேவைக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆறுகளிலிருந்து பெரிய அளவில் பிடிப்பதால், இதன் வாழ்வு அச்சுறுத்தலுக்குள்ளாகிறது. செம்பட்டியல் தரவு புத்தகத்தில் இவை அழிவின் விளிம்பில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]