பெருங்களத்தூர்

பெருங்களத்தூர்
—  சென்னையின் புறநகர்ப் பகுதி  —
வரைபடம்:பெருங்களத்தூர், இந்தியா
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் தாம்பரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

37,342 (2011)

5,078/km2 (13,152/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7.354 சதுர கிலோமீட்டர்கள் (2.839 sq mi)

பெருங்களத்தூர் (Perungalathur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தில் இருக்கும் தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும்.

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்

[தொகு]

3 நவம்பர் 2021 அன்று இந்த பகுதியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

அமைவிடம்

[தொகு]

காஞ்சிபுரம் - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்த பெருங்களத்தூர் பகுதி, மாவட்டத் தலைமையிடமான செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ.; காஞ்சிபுரத்திலிருந்து 45 கி.மீ.; பல்லாவரத்திலிருந்து 12 கி.மீ.; தொலைவிலும் உள்ளது. பெருங்களத்தூரில் தொடருந்து நிலையம் உள்ளது.

பகுதியின் அமைப்பு

[தொகு]

7.354 சதுர கி.மீ. பரப்பும், 461 தெருக்களையும் கொண்ட இப்பகுதி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதி 9,584 வீடுகளும், 37,342 மக்கள்தொகையும், கொண்டது.

மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 91.36 % மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Perungalathur Population Census 2011