பெருந்தலைவர் மக்கள் கட்சி | |
---|---|
தலைவர் | என். ஆர். தனபாலன் |
தொடக்கம் | 2011 |
கூட்டணி | அதிமுக முன்னணி |
இணையதளம் | |
htthhb://www.ptmkparty.com | |
இந்தியா அரசியல் |
பெருந்தலைவர் மக்கள் கட்சி (Perunthalaivar Makkal Katchi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும்.[1]
தென்தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட நாடார் சமூகத்தினரால் இந்த கட்சி தோற்றுவிக்கப்பட்டது. தன் வாக்கு வங்கியாகத் தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள நாடார்களை மையமாகக் கொண்டு இக்கட்சி செயல்படுகிறது. கட்சி 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் நாளன்று பா.சிவந்தி ஆதித்தன் அவர்களால் தொடங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டது.
ஆண்டு | பொது தேர்தல் | போட்டியிட்ட இடங்கள் | வென்ற இடங்கள் | கூட்டணி |
---|---|---|---|---|
2011 | 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | 1 | 0 | திமுக கூட்டணி |
தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் இவர்களுக்கு ஒரு தொகுதியை 2011ஆம் ஆண்டு தேர்தலில் ஒதுக்கியது.[2] இத்தேர்தலில் என். ஆர். தன்பாலன் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[1]