பெரும் இமயமலை (Greater Himalayas) (Great Himalayas) இமயமலை அமைப்பின் உள்ள ஒரு உயா்ந்த மலைத் தொடர் ஆகும்.[1][2] உலகின் மிக உயரமான சிகரமான எவரெசுட்டு சிகரமும், மற்றும் "அருகில் உள்ள-உயர்ந்த" சிகரங்களான கஞ்சன்ஜங்கா, இலோட்சே, நங்க பர்வதம் போன்றவையும் பெரும் இமயமலைத் தொடரின் ஒரு பகுதியாகும். பெரிய இமயமலை மேற்கிலிருந்து கிழக்கு வரை மொத்தம் 2400 கிமீ (1500 மைல்கள்) நீண்டுள்ளது. மேலும் இதன் சராசரி உயரம் 6000 மீ (20000 அடி) ஆகும்.
கங்கோத்ரி பனிப்பாறை மற்றும் சதோபந்த் பனிப்பாறை உட்பட பல பனிப்பாறைகள் இந்த மலைத்தொடரில் உள்ளன.
இந்த மலைத்தொடா் இந்தியா, சீனா, நேபாளம், பாக்கித்தான், பூட்டான், மற்றும் திபெத்து ஆகிய பகுதிகளில் பரவியுள்ளது.