பெர் ஆசுகார் ஆண்டர்சன் (Per Oskar Andersen) நார்வே நாட்டைச் சேர்ந்த ஓசுலோ பல்கலைக்கழகத்தில் மனித மூளை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஓர் ஆய்வாளர் ஆவார். இவர் பெ ஆண்டர்சன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். 1930 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் நாள் இவர் பிறந்தார். இவரது ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட குறிப்பாக டெர்சே லெமோ (பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வை வகைப்படுத்த திமோதி பிளிசு உதவினார்) 1966 ஆம் ஆண்டு மூளையின் நீண்டகால ஆற்றலைக் கண்டறிய வழிவகுத்தார்[1].
நார்வேயின் அறிவியல் மற்றும் கடிதங்கள்[2] அகாதமியிலும் ராயல் கழகத்திலும் ஆண்டர்சன் உறுப்பினராக இருந்தார்[3]. சூரிக், சிடாக்கோம் பல்கலைக்கழகங்களில்[4] இவர் கௌரவ பட்டங்கள் பெற்றிருந்தார்.
நார்வே நாட்டின் புளோமிங்கோம் கிராமத்தில் இவர் வசித்தார். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று ஆண்டர்சன் இறந்தார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)CS1 maint: unrecognized language (link)