பெர்கே–குலாகு போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
டொலுய் உள்நாட்டுப் போர், மங்கோலியப் பேரரசின் பிரித்தல் மற்றும் தங்க நாடோடிக் கூட்டம்-ஈல்கானரசுப் போரின் ஒரு பகுதி | |||||||
![]() தெரக் ஆற்று யுத்தம் (1262) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஈல்கானரசு | ![]() |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
குலாகு கான் அபகா கான் சிரமுன் | ![]() ![]() ![]() ![]() |
பெர்கே-குலாகு போர் என்பது தங்க நாடோடிக் கூட்டத்தின் பெர்கே கான் மற்றும் ஈல்கானரசின் குலாகு கான் ஆகிய இரு மங்கோலியத் தலைவர்களுக்கிடையே நடந்த ஒரு போராகும். இப்போர் பெரும்பாலும் 1260களில் காக்கேசிய மலைப் பகுதிகளில், 1258ஆம் ஆண்டின் பகுதாது அழிவிற்குப் பிறகு நடந்தது. இந்தப் போரும் டொலுய் உள்நாட்டுப் போரும் ஒரே சமயத்தில் நடந்தன. டொலுய் உள்நாட்டுப் போரில், மங்கோலியப் பேரரசின் டொலுய் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் மோதிக் கொண்டனர். அவர்கள் குப்லாய் கான் மற்றும் அவரது தம்பி அரிக் போகே. இந்த இருவருமே ககான் பட்டத்திற்காக உரிமை கோரினர். குப்லாய் குலாகுவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். அதே நேரத்தில் அரிக் போகே பெர்கேயுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். மோங்கே கானுக்குப் பிறகு புதிய கானைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்காகக் குலாகு மங்கோலியாவிற்குப் புறப்பட்டார். எனினும், ஐன் ஜலுட் யுத்தத்தில் எகிப்திய அடிமை வம்சத்தவர்களிடம் அடைந்த தோல்வியானது அவரை மத்திய கிழக்குக்கு மீண்டும் வரவைத்தது. எகிப்திய அடிமை வம்சத்தவரின் வெற்றி ஈல்கானரசு மீது படையெடுக்க பெர்கேவிற்கு உத்வேகம் கொடுத்தது. பெர்கே-குலாகு போர், டொலுய் உள்நாட்டுப் போர் மற்றும் அதைத் தொடர்ந்து கய்டு-குப்லாய் போர் ஆகியவை மங்கோலியப் பேரரசின் நான்காவது ககானாகிய மோங்கே கானின் இறப்பிற்குப் பிறகு மங்கோலியப் பேரரசில் ஏற்பட்ட விரிசலில் ஒரு முக்கியத் தருணமாக அமைந்தது.[2][3][4]