குறிக்கோளுரை | அறிவே சக்தி / Knowledge is Power |
---|---|
வகை | பொது பல்கலைக்க்கழகம் |
உருவாக்கம் | 1885 |
சார்பு | புனே பல்கலைக்கழகம் |
தலைவர் | டெக்கான் கல்வி சபை |
முதல்வர் | முனைவர். இரவீந்திரசிங் ஜி. பர்தேசி[1] |
துணை முதல்வர்கள் | முனைவர். என். எம். குல்கர்ணி பேராசிரியர் பி. எம். பவார் சுவாதி ஜோகலேகர்[1] |
அமைவிடம் | பெர்க்குசன் கல்லூரிச் சாலை , , , |
இணையதளம் | www.fergusson.edu |
பெர்க்குசன் கல்லுரி (Fergusson College (FC)[2] கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகள் கொண்ட தன்னாட்சி பெற்ற பொதுக் கல்லூரியாகும். பிரித்தானிய இந்தியா ஆட்சியின் போது, 1885-இல் டெக்கான் கல்வி சபையால் இக்கல்லூரி பம்பாய் மாகாணத்தின் புனே நகரத்தில் நிறுவப்பட்டது.[3] பெர்க்குசன் கல்லூரியை நிறுவியர்களில் இந்திய தேசிய காங்கிரசு தலைவர்களில் பால கங்காதர திலகர் மற்றும் கோபால கிருஷ்ண கோகலே மற்றும் பம்பாய் மாகாண ஆளுநர் சர் ஜேம்ஸ் பெர்க்குசன் ஆகியோர் முக்கியமானவர்கள். தன்னாட்சி பெற்ற இக்கல்லூரி, புனே பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகும்.
பெர்க்குசன் கல்லூரி கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் கொண்ட தன்னாட்சி பெற்ற பொதுக் கல்லூரியாகும்.[4][5][6] பேராசிரியர் வாகன் சிவராம் ஆப்தே இக்கல்லூரியில் முதல் முதல்வர் ஆவார்.[7][8] பம்பாய் மாகாணத்தின் ஆளுநராக இருந்த சர் ஜேம்ஸ் பெர்குசன் ரூபாய் 1,200 நன்கொடை வழகியதால், இக்கல்லூரிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
இக்கல்லூரி இரண்டு பிரிவுகள் கொண்டது:
இந்திய விடுதலையின் போது இக்கல்லூரி 65 ஏக்கர் பரப்பளவு கொண்டது.[10] பின்னர் இக்கல்லூரியின் வளாகத்தை ஒட்டிய குன்றுப் பகுதிகளைக் கொண்டு இக்கல்லூரி விரிவுபடுத்தப்பட்டது.