பெர்ரி பொருளடக்கம் என்பது ஈசாப்புடையதாகக் கூறப்படும் "ஈசாப்பின் நீதிக்கதைகள்" அல்லது "ஈசாப்பிகா" ஆகியவற்றின் ஒரு பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருளடக்கம் ஆகும். ஈசாப் கி. மு. 620 மற்றும் 560க்கு இடையில் பண்டைக் கிரேக்கத்தில் வாழ்ந்த ஒரு கதை கூறுபவர் ஆவார். இப்பொருளடக்கத்தை பென் எட்வின் பெர்ரி என்ற பேராசிரியர் உருவாக்கினார். இப்பேராசிரியர் இலினொய் பல்கலைக்கழகத்தில் பண்டைக் காலம் சார்ந்த பேராசிரியராகப் பணியாற்றினார்.
நவீன கால அறிஞர்கள் ஈசாப்புடையதாகக் கூறப்படும் அனைத்து கதைகளையும் ஈசாப் மட்டுமே கூறவில்லை என்று கருதுகின்றனர்;[1] உண்மையில் இவற்றில் சில கதைகள் ஈசாப் வாழ்ந்ததற்கு முன்னரே பயன்படுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பல பிற கதைகளின் முதல் பதிவானது ஈசாப்பின் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்து உருவாக்கப்பட்டன. பொதுவாக ஈசாப்பின் நீதிக் கதைகள் ஆங்கிலத்தில் அகர முதலாக வரிசைப்படுத்தப்பட்டன. இவை வாசிப்பவர்களுக்கு உதவிகரமாக இல்லை.[2] பெர்ரி இவற்றை மொழி (கிரேக்கம் மற்றும் இலத்தீன்), கால வரிசைப்படி, நூல் ஆதாரங்களின் படி, மற்றும் பிறகு அகர முதல் வரிசைப்படி பட்டியலிட்டார்; எசுப்பானிய அறிஞர் பிரான்சிஸ்கோ இரோத்ரிகுவேசு அத்ரதோசு இதே போன்றதொரு அமைப்பை உருவாக்கினார்.[2] இந்த அமைப்பும் பொதுவான வாசிப்பாளருக்கு உதவிகரமானதாக இருப்பதில்லை. ஆனால் அறிஞர்களுக்கு உதவிகரமாக இருப்பதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.[2]
பெர்ரி 1. கழுகும், நரியும் பெர்ரி 2. கழுகு, காகம் மற்றும் மேய்ப்பாளர் பெர்ரி 3. கழுகும், வண்டும் பெர்ரி 4. வல்லூறும், நைட்டிங்கேலும் பெர்ரி 5. ஏதேனிய கடனாளி பெர்ரி 6. ஆடு மேய்ப்பாளரும், காட்டு ஆடுகளும் பெர்ரி 7. மருத்துவராக பூனையும், கோழிகளும் பெர்ரி 8. ஈசாப்பும், ஓடக்காரரும் பெர்ரி 9. கிணற்றில் நரியும், ஆடும் பெர்ரி 10. சிங்கமும், நரியும் குறிப்புகள்[தொகு]
|