பெர்லிஸ் சமலுலாயில் அரச குடும்பம் House of Jamalullail (Perlis) | |
---|---|
மூல குடும்பம் | பாலாவி சதா (Ba'Alawi sadah) |
நாடு | மலேசியா |
நிறுவப்பட்டது | 1797 (ஆராவ் பெங்குலு) 1843 (பெர்லிஸ் ராஜா) |
நிறுவனர் | மன்னர் சையத் உசைன் சமலுலாயில் |
தற்போதைய தலைமை | பெர்லிஸ் இராஜா சிராஜுதீன் (Sirajuddin of Perlis) |
பட்டங்கள் | மேன்மைமிகு பெர்லிஸ் இராஜா |
பெர்லிஸ் இராஜா சிராஜுதீன் Sirajuddin of Perlis | |
---|---|
பெர்லிஸ் இராஜா | |
2018-இல் பெர்லிஸ் இராஜா சிராஜுதீன் | |
12-ஆவது மலேசிய அரசர் | |
ஆட்சிக்காலம் | 13 டிசம்பர் 2001 – 12 டிசம்பர் 2006 |
மலேசியா | 25 ஏப்ரல் 2002 |
முன்னையவர் | சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன் |
பின்னையவர் | திராங்கானு சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் |
பிறப்பு | 17 மே 1943 ஆராவ், பெர்லிஸ், மலேசியா |
துணைவர் | பெர்லிஸ் அரசியார் பவுசியா (தி. 1967) |
மரபு | சமாலுலாயில் அரச குடும்பம் |
மதம் | இசுலாம் |
பெர்லிஸ் இராஜா அல்லது பெர்லிஸ் சமலுலாயில் அரச குடும்பம் (ஆங்கிலம்: House of Jamalullail; மலாய்: Raja Perlis; ஜாவி: راج ڤرليس) என்பது மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தின் தற்போதைய ஆளும் அரச குடும்பமாகும். பெர்லிஸ் இராஜா எனும் பட்டப் பெயர் பெர்லிஸ் மாநிலத்தின் ஆட்சியாளர் அரச பட்டமாகும். பெர்லிஸ் மாநிலத்தின் அரசர்களை இராஜா (Raja) என்று அழைக்கிறார்கள்.
சுல்தான் என்ற பட்டத்துடன் பரம்பரை ஆட்சியாளர்களைக் கொண்ட பிற மலேசிய மாநிலங்களைப் போல் அல்லாமல், பெர்லிஸ் பரம்பரை ஆட்சியாளர்கள் இராஜா என்ற பட்டத்துடன் அழைக்கப் படுகிறார்கள். இந்த அரச நடைமுறை 1843-ஆம் ஆண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது.[1]
1843-ஆம் ஆண்டில், கெடா மாநிலத்தில் இருந்து பெர்லிஸ் பிரிந்து செல்வதற்கு அப்போதைய கெடா அரசர், சுல்தான் அகமத் தாஜுடின் II (Sultan Ahmad Tajuddin II) ஒப்புதலை வழங்கினார். அந்த ஒப்புதலுக்குப் பின்னர் பெர்லிஸ் இராஜா எனும் பட்டப் பெயருடன் சமாலுலாயில் அரச வம்சாவளி (House of Jamalullail) தோற்றுவிக்கப்பட்டது.[2][3]
பெர்லிஸ் இராஜா, மலேசியாவின் மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் பதவிக்கு தகுதி பெறும் ஒன்பது மலாய் ஆட்சியாளர்களில் ஒருவர் ஆவார்.
அத்துடன் அந்த ஒன்பது மலாய் ஆட்சியாளர்களில் ஒருவர்தான் யாங் டி பெர்துவான் அகோங் (Yang di-Pertuan Agong) பதவிக்கு தேர்வும் செய்யப் படுகிறார்.
பல்வேறு காலக் கட்டங்களில் சயாமியர்களின் ஆளுமையின் கீழ் பெர்லிஸ் மாநிலம் இயங்கி வந்துள்ளது. ஆனால், வரலாற்றின்படி பெர்லிஸ் மாநிலம் கெடா மாநிலத்திற்குச் சொந்தமான ஒரு நிலப்பகுதி ஆகும்.
கெடா சுல்தான்கள் பெர்லிஸ் மாநிலத்தைத் தங்களின் ஒரு பகுதியாகவே ஆட்சி செய்து வந்துள்ளனர். இருப்பினும் 1821-ஆம் ஆண்டு, கெடா மாநிலத்தை சயாமியர்கள் கைப்பற்றினர்.
கெடா, பெர்லிஸ் மாநிலங்கள், சில ஆண்டுகள் சயாமியர்களின் ஆட்சியின் கீழ், தனித்தனி மாநிலங்களாக இயங்கி வந்தன. 1842-ஆம் ஆண்டு, கெடா மாநிலம் மீண்டும் கெடா மாநில சுல்தானிடமே கொடுக்கப் பட்டது.
1842-ஆம் ஆண்டுக்குப் பின்னர், பெர்லிஸ் மாநிலம் கெடா மாநிலத்தின் ஒரு நிர்வாக மாநிலமாக மாறியது. 1909-ஆம் ஆண்டு ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கை எனும் பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி பெர்லிஸ் பிரித்தானியர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.
1942-இல் ஜப்பானியர்கள் படையெடுத்த போது பெர்லிஸ் மநிலம் மறுபடியும் சயாமியர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. ஜப்பானியர்கள் சரண் அடைந்ததும் பெர்லிஸ் திரும்பவும் பிரித்தானியர்களின் கைவசம் வந்தது. 1957-ஆம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரையில் பிரித்தானியர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.
பெர்லிஸ் மாநிலத்தை சுமத்திராவின் ஆச்சே அரசு சில காலம் ஆண்டு வந்துள்ளது. 1821-இல் சயாமியர்கள் கெடாவைத் தாக்கிக் கைப்பற்றியதும், மலாயாவில் இருந்த பிரித்தானியர்கள் கலக்கம் அடைந்தனர். அந்தச் சமயத்தில் பேராக், பிரித்தானியர்களின் ஆளுமையின் கீழ் இருந்தது.
சயாமியர்கள் எந்தக் கட்டத்திலும் பேராக் மாநிலத்தைக் கைப்பற்றலாம் என்று பிரித்தானியர்கள் அஞ்சினர். அதன் விளைவாக பர்னி அண்ட் லோ உடன்படிக்கை (Burney and Low Treaty) கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையில் கெடா, பெர்லிஸ், சயாம், பிரிட்டன் கையெழுத்திட்டன.
பர்னி அண்ட் லோ உடன்படிக்கையின்படி நாடு கடத்தப்பட்ட கெடா சுல்தான் அகமட் தாஜுடின் அரியணையில் அமர்த்தப்படவில்லை. அதனால், சுல்தான் அகமட் தாஜுடினும் அவருடைய ஆதரவாளர்களும் ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தனர். 1830லிருந்து 1842 வரை நடந்த அந்தப் போராட்டம் நீடித்தது. இறுதி வரையில் அவர்களால் வெற்றி பெற இயலவில்லை.[4]
ஆனால், 1842-இல் சயாமியர்கள் விதித்த சில நிபந்தனைகலுடன் கூடிய கோரிக்கைகளைச் சுல்தான் அகமட் தாஜுடின் ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் கெடா சுல்தானாக அரியணையில் அமர்த்தப் பட்டார். இந்தக் கட்டத்தில் பெர்லிஸ் மாநிலம், கெடா சுல்தானகத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. பெர்லிஸ் நேரடியாக பாங்காக் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
பின்னர் சாயிட் உசேன் ஜமாலுலாயில் (Sayyid Hussain Jamalulail) என்பவர் பெர்லிஸ் சுல்தானாக பதவிக்கு வந்தார். இவர் அரபு நாட்டைச் சேர்ந்த ஆட்ராமி அராப் சாயுட் (Hadhrami Arab Sayyid) என்பவரின் தந்தைவழி பேரன் ஆவார். சுல்தான் எனும் அரசப் பதவி இராஜா என்று பின்னர் மாற்றம் அடைந்தது.[5]
அதனால், பெர்லிஸ் சுல்தான் என்பவர் பெர்லிஸ் இராஜா என்றே இன்றும் அழைக்கப் படுகின்றனர். இவருடைய சந்ததியினர் தான் இன்று வரையில் பெர்லிஸ் மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர்.