நீலகிரி பொந்து பாம்பு | |
---|---|
நீலகிரி பொந்து பாம்பு அல்லது பெராடெட் கேடயவால் பாம்பு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | யூரோபெல்டிடே
|
பேரினம்: | பெலிக்டுரரசு துமெரில், 1851
|
வேறு பெயர்கள் | |
|
பெலிக்டுரரசு (Plectrurus) என்பது பாம்புப் பேரினம் ஆகும். இப்பேரினப் பாம்புகள் நச்சற்றவை. இப்பாம்புகளின் வால் கேடயம் போலக் காணப்படும். இவை தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரிகளாகும்.[1] தற்போது, நான்கு சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[3] இவை அதிக உயரமுள்ள மாண்டேன் ஷோலா காடுகளில் வாழ்கின்றன. இவை பொதுவாக விழுந்து கிடக்கும் மரங்களின் அடியிலோ பாறைகளின் பள்ளங்களிலோ காணப்படுகின்றன. சில இனங்கள் அரிதானவை. சில இவற்றின் வரம்பில் மிகவும் பொதுவாகக் காணப்படும்.
இந்த வகைப் பாம்புகள் மிகச் சிறியன. இவற்றின் நீளம் 43 செ.மீ. வரை காணப்படும்.
கண் கவசம் ஒன்று கண்ணை மூடுகிறது. கண்கள் சிறியவை. விட்டம் கண் கவசத்தின் நீளத்திற்குப் பாதிக்கு மேல் இல்லை. வால் பக்கவாட்டில் சுருக்கப்படுகிறது. வாலின் நுனி தட்டயாக இரண்டு புள்ளிகளுடன் காணப்படுகிறது. நுனி எளிமையாகவோ, இரு, அல்லது மூன்று பிரிவுகளுடையன.[4]
சிற்றினம்[3] | கண்டுபிடித்தவர்[3] | பொதுவான பெயர்[2] | புவியியல் வரம்பு[1] |
---|---|---|---|
பெலிக்டுரரசு ஆரியசு | பெடோம், 1880 | தங்க கேடய வால் பாம்பு | தென்னிந்தியா குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு. அக்டோபர் 2020இல், இரண்டு மாதிரிகள் 10 வயது துருவ் கவுடாவால் கண்டுபிடிக்கப்பட்டன. 140 ஆண்டுகளில் இந்த பாம்பைப் பார்த்ததாகப் பதிவு செய்யப்படவில்லை.
இந்த பாம்பு கடைசியாக 1880இல் கேரளாவின் வயநாட்டில் உள்ள சுப்ரா மலைகளில் காணப்பட்டதாகக் கூறப்பட்டது. சுப்ரா மலைகளில் 1880 முதல் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லை. |
பெலிக்டுரரசு குந்தேரி | பெடோம், 1863 | குந்தரின் கவச வால் பாம்பு | மேற்குத் தொடர்ச்சி மலை: நீலகிரி மலையின் மேற்குப் பகுதியில் சிஸ்பரா காட் |
பிளெக்ட்ரசு பெரோடெட்டிஅ | ஏ.எச்.ஏ டுமரில், 1851 | பெரோட்டெட்டின் கவச வால் பாம்பு | மேற்குத் தொடர்ச்சி மலை: நீலகிரி மலைகள், இது ஒரு பொதுவான இனம். |
*) பரிந்துரைக்கப்பட்ட துணையினங்கள் சேர்க்கப்படவில்லைஅ) வகை இனங்கள்[1]