பெலிசெர் வளையம் | |
---|---|
கூம்பு வடிவ கருவிழி நோயின் போது பெலிசெர் வளையம் (மகமோது மற்றும் பலர், 2022)[1] | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
பெலிசெர் வளையம் (Fleischer ring) என்பது கருவிழிப்படலத்தின் ஓரங்களில் காணப்படும் நிறமி வளையங்கள் ஆகும். இவை இரும்பு படிவின் விளைவாகப் புறப்படை உயிரணுக்களில் ஹீமோசிடெரின் வடிவில் ஏற்படுகிறது.[2][3] இவை பொதுவாக மஞ்சள் நிறத்திலிருந்து அடர் பழுப்பு நிறத்திலிருக்கும். மேலும் இவை முழுமையானதாகவோ அல்லது உடைந்ததாகவோ இருக்கலாம்.[4] கோபால்ட் நீல வடிகட்டியினைக் குறுகிய துளை விளக்கைப் பயன்படுத்தி இந்த வளையங்களைக் காணப்படுகின்றன.[4]
இவை புருனோ பெலிசெரின் பெயரால் அழைக்கப்படுகின்றன.[5]
பெலிசெர் வளையங்கள் கூம்பு விழிப்படலத்தைக் குறிக்கின்றன. இது ஒரு சிதைவடைந்த கருவிழி நிலை. இது கருவிழியினை மெல்லியதாகவும் கூம்பு வடிவமாகவும் மாற்றுகிறது.[6]
பெலிசர் வளையங்களுக்கும் கெய்சர்-பெலிசர் வளையங்களுக்கும் இடையே சில குழப்பங்கள் உள்ளன. கெய்சர்-பெலிசர் வளையங்கள் தெசெமெண்ட் கருவிழி உட் சவ்வில் செப்பு சேர்வதால் ஏற்படுகின்றன. மேலும் இவை வில்சன் நோயைக் குறிக்கின்றன. ஆனால் பெலிசர் வளையங்கள் இரும்பு படிவதால் ஏற்படுகிறது. பெலிசர் வளையங்கள் காணப்படும் மருத்துவ நோய் நிலைக்கு ஓர் எடுத்துக்காட்டு கூம்பு வடிவக் கருவிழி ஆகும்.