பெலுரான் நகரம் Beluran Town Peka Beluran | |
---|---|
ஆள்கூறுகள்: 5°53′0″N 117°34′0″E / 5.88333°N 117.56667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | சண்டக்கான் பிரிவு |
மாவட்டங்கள் | பெலுரான் மாவட்டம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 3,132 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 91XXX |
தொலைபேசி | +6-0895 |
வாகனப் பதிவெண்கள் | SS (1980-2018) SM (2018-) SK |
பெலுரான் என்பது (மலாய்: Pekan Beluran; ஆங்கிலம்: Beluran Town); மலேசியா, சபா மாநிலம், சண்டாக்கான் பிரிவு, பெலுரான் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சூலு கடலில் கலக்கும் லாபோக் ஆற்றின் (Sungai Labuk) கரையில் பெலூரான் நகரம் அமைந்து உள்ளது. சண்டாக்கான் நகரில் இருந்து 88 கி.மீ. தொலைவில் உள்ளது.
பெலுரான் மாவட்டத்தின் மக்கள் தொகையானது திடோங் (Tidong); ஒராங் சுங்கை (Orang Sungai); கடாசான் (Kadazan); டூசுன் (Dusun); மற்றும் சுலுக் போன்ற பல்வேறு இனக்குழுக்களின் கலவையாகும்.
பெலுரான் மாவட்டம், முன்பு லாபோக் - சூகுட் (Labuk-Sugut) மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவன நிர்வாகத்தின் தொடக்கக் காலத்தில் இருந்தே அறியப்பட்டு உள்ளது. சபா மாநிலத்தின் தொடக்கக்கால நகரங்களில் பெலூரான் நகரமும் ஒன்றாகும்.[1]
சபா மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் நிலநடுக்கங்களின் அதிர்வுகள் ஏற்படுவது உண்டு. மிக அண்மையில் 2022 மார்ச் 28-ஆம் தேதி பெலுரானில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.[2]
முன்பு காலத்தில் பெலுரான் என்பது "பெலுடான்" (Buludan) என்று அழைக்கப்பட்டது. புலுடான் என்றால் மலை என்று பொருள். இந்தப் பெயர் இப்போது அங்கு வாழும் ஒவ்வோர் இனத்தவராலும் பயன்படுத்தப் படுகிறது.
சபா மாநிலத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் பெலுடான் என்று உச்சரிக்க சிரமப்பட்டதாகவும்; காலப் போக்கில் அந்தப் பெயர் பெலுரான் என்று திரிபுநிலை அடைந்ததாகவும் சொல்லப் படுகிறது.
பெலுரான் மாவட்ட நிர்வாக அலுவலகம் 1916-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இருப்பினும் இரண்டாம் உலகப் போரின் விளைவாக அலுவலகத்தில் இருந்த அனைத்துப் பதிவுகளும் தரவுகளும் அழிந்து போயின.
சில பழைய சான்றுகளின்படி, பி.எஸ். வில்லி (B.S Willie) என்பவர் 1945-ஆம் ஆண்டில் பெலுரான் மாவட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.[1]