பெலுரான் (P183) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Beluran (P183) Federal Constituency in Sabah | |
![]() பெலுரான் மக்களவைத் தொகுதி (P183 Beluran) | |
மாவட்டம் | பெலுரான் மாவட்டம் தெலுபிட் மாவட்டம் சண்டக்கான் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 44,727 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பெலுரான் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெலுரான்; தெலுபிட் சுகுட், உலு சாப்பி |
பரப்பளவு | 7,448 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | ரொனால்டு கியாண்டி (Ronald Kiandee) |
மக்கள் தொகை | 101,066 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1995 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பெலுரான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Beluran; ஆங்கிலம்: Beluran Federal Constituency; சீனம்: 伯鲁兰联邦选区) என்பது மலேசியா, சபா, சண்டக்கான் பிரிவு; பெலுரான் மாவட்டம்; தெலுபிட் மாவட்டம்; ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P183) ஆகும்.[5]
பெலுரான் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து பெலுரான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
தெலுபிட் மாவட்டம் என்பது சபா மாநிலம், சண்டக்கான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் தெலுபிட் நகரம். முன்பு பெலூரான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாவட்டம் இருந்தது.
தெலுபிட் மாவட்டத்தில் முதன்முதலில் 1940-ஆம் ஆண்டுகளில் முதல் குடியேற்றம் நடந்தது. இரண்டாம் உலகப் போரின் போது சண்டாக்கான் மரண அணிவகுப்பிற்கான (Sandakan Death Marches) முக்கியப் பாதையாகவும் இருந்தது.
1940-ஆம் ஆண்டுகளில், இந்த மாவட்டத்தில் டூசுன் மக்கள் அதிகமாக வசித்து வந்தனர். 1965-இல், மலேசியாவின் ஒரு பகுதியாக சபா மாறிய சிறிது காலத்திலேயே தற்போதைய தெலுபிட் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அரசாங்கமும்; மலேசிய அரசாங்கமும் இணைந்து ஒரு நெடுஞ்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்ததைத் தொடர்ந்து இந்த மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.
பெலுரான் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7]
பெலுரான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)
பெலுரான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)
பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1995 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பெலுரான் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது மக்களவை | P159 | 1995-1999 | அசுமாட் நுங்கா (Asmat Nungka) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
10-ஆவது மக்களவை | 1999-2004 | ரொனால்டு கியாண்டி (Ronald Kiandee) | ||
11-ஆவது மக்களவை | P183 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018-2019 | சுயேச்சை | |||
2019-2020 | பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |||
2020–2022 | சபா மக்கள் கூட்டணி (GRS) (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ரொனால்டு கியாண்டி (Ronald Kiandee) | பெரிக்காத்தான் நேசனல் (PN) | 11,303 | 38.53 | 38.53 ![]() | |
பெனடிக்ட் அசுமத் (Benedict Asmat) | பாரிசான் நேசனல் (BN) | 9,709 | 33.10 | 29.74 ▼ | |
பெலிக்ஸ் ஜோசப் சாங் (Felix Joseph Saang) | பாக்காத்தான் (PH) | 4,460 | 15.20 | 15.20 ![]() | |
ரோவினா ரசித் (Rowiena Rasid) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 3,707 | 12.64 | 15.83 ▼ | |
அவுசிங் சுடின் @ சம்சுடின் (Hausing Sudin @ Samsudin) | தாயக இயக்கம் (GTA) | 155 | 0.53 | 0.53 ![]() | |
மொத்தம் | 29,334 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 29,334 | 97.94 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 617 | 2.06 | |||
மொத்த வாக்குகள் | 29,951 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 44,727 | 65.58 | 10.21 ▼ | ||
Majority | 1,594 | 5.43 | 28.95 ▼ | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)