பெல்ஜியம் அரச பூச்சியியல் சங்கம் (Royal Belgian Entomological Society) என்பது பெல்ஜியத்தின் பிரசெல்சினை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியாளர் சமூகமாகும். இது பூச்சியியல் ஆய்வுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இச்சங்கம் 9 ஏப்ரல் 1855-ல் நிறுவப்பட்டது.[1]
இச்சமூகத்தின் மூலம் செய்திமடல், பெல்ஜியன் ஜர்னல் ஆப் என்டமாலஜி (பெல்ஜிய பூச்சியியல் ஆய்விதழ்)[2] மற்றும் தி மெமோயர்சு எனும் வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன.
இச்சங்கத்தின் முதல் தலைவர் எட்மண்ட் டி செலிஸ் லாங்சாம்ப்சு (1813-1900) ஆவார்.