பே ப்ரண்ட் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்தியப் பகுதியில் பே ப்ரண்ட் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வட்டப்பாதை வழித்தடத்தில் இது இருபத்தி ஒன்பதாவது தொடருந்துநிலையமாகும். இது மரீனா பே தொடருந்து நிலையம் மற்றும் துறைமுகம் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் டோபி காட் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
நகர்மையம் வழித்தடத்தில் இது பதினைந்தாவது தொடருந்துநிலையமாகும். இது புரொமனெட் தொடருந்து நிலையம் மற்றும் நகர மையம் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.