பேராக் ஆறு Perak River | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | மலை சார்ந்த பேராக்; கிளாந்தான்; தாய்லாந்து அரச பெலும் தேசியப் பூங்கா |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | பாகன் டத்தோ |
⁃ ஆள்கூறுகள் | 4°01′N 100°47′E / 4.017°N 100.783°E |
நீளம் | 400 km (250 mi) |
வடிநில அளவு | 14,900 km2 (5,800 sq mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | கங்சார் ஆறு |
⁃ வலது | மாச்சாங் ஆறு; மேரா ஆறு |
நகரங்கள்- குடியிருப்புகள் | கிரிக் லெங்கோங் கோலாகங்சார் பாரிட் பாசிர் சாலாக் தெலுக் இந்தான் பாகன் டத்தோ |
பேராக் ஆறு என்பது (மலாய்: Sungai Perak; ஆங்கிலம்: Perak River; ஜாவி: سوڠاي ڤيرق); மலேசியாவின் பேராக் மாநிலத்தில் மிக நீளமான ஆறு. 400 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஆறு, கிரிக்,லெங்கோங், கோலாகங்சார், பாரிட், பாசிர் சாலாக், தெலுக் இந்தான், பாகன் டத்தோ ஆகிய நகரங்களைக் கடந்து சென்று மலாக்கா நீரிணையை அடைகிறது.[1]
தீபகற்ப மலேசியாவில் மிக நீளமான ஆறு, பகாங் மாநிலத்தில் உள்ள பகாங் ஆறு ஆகும். அந்தப் பகாங் ஆற்றுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது நீளமான ஆறு இந்த பேராக் ஆறு ஆகும். பேராக் மாநிலத்தின் அரச நகரமான கோலாகங்சார் உட்பட பல நகரங்கள் இந்த ஆற்றின் கரைகளில் உள்ளன.[2]
ஈப்போ, கிந்தா பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் ஈயம் கண்டுபிடிக்கும் வரையில், பேராக்கில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகள் 19-ஆம் நூற்றாண்டு வரை இந்தப் பேராக் ஆற்றின் அருகில்தான் அமைந்து இருந்தன.
மலேசிய மாநிலங்களான பேராக், கிளாந்தான்; மற்றும் தாய்லாந்து எல்லையில் உள்ள பெலும் வனக் காப்பகத்தின் (Belum Forest Reserve) எல்லையில் இந்த ஆறு உற்பத்தி ஆகிறது. அதாவது அரச பெலும் வனக் காப்பகத்தில் (Royal Belum State Park); மாச்சாங் ஆறு மற்றும் மேரா ஆறு; ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் பேராக் ஆறு உருவாகிறது.
மாச்சாங் ஆறு பேராக் மாநிலத்தின் தித்திவாங்சா மலைத் தொடரில் உருவாகிறது. அதே சமயத்தில், தாய்லாந்தின் பேங் லாங் தேசிய பூங்காவில் (Bang Lang National Park) மேரா ஆறு உருவாகிறது.
மாச்சாங் ஆறு; மேரா ஆறு; ஆகிய இரு ஆறுகளும் இணைந்து பேராக் ஆற்றை உருவாக்குகின்றன. கிரிக் அருகே உள்ள பண்டிங் எனும் இடத்தில் தெமங்கோர் அணை (Temenggor Dam) எனும் ஒரு பெரிய ஏரி உருவாக்கப்பட்டு உள்ளது.
இங்குதான் மலேசியாவில் பிரசித்தி பெற்ற தெமங்கோர் நீர் மின் திட்டம் (Temengor Hydro-Electric Project) அல்லது தெமங்கோர் மின் நிலையம் (Temengor Power Station) உள்ளது.