பேரீச்சம்பழச் சர்க்கரை (Date sugar) என்பது இயற்கை உணவுக் கடைகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு வகை சர்க்கரையாகும். ஏனெனில் இது வழக்கமான சர்க்கரைகளைக் காட்டிலும் குறைவாகவே பதப்படுத்தப்படுகிறது. உலர்ந்த பேரீச்சம்பழங்களில் இருந்து இச்சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. சமைக்கும் உணவுகளுக்கு அதிக இனிப்பு சுவையைச் சேர்க்கிறது, இருப்பினும் பானங்களில் சேர்க்கும்போது இது கரையாது. மணியுருவ சர்க்கரையைப் போல உருகவும் செய்யாது. எனவே இதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தலாம். சில நேரங்களில் பழுப்பு சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக இச்சர்க்கரை விளம்பரப்படுத்தப்படுகிறது. மிகவும் விலை உயர்ந்ததாக விற்கப்படுகிறது. பேரிச்சம்பழ சர்க்கரையை பனை வெல்லம் என்று குழப்பிக் கொள்ளக் கூடாது. பனை வெல்லம் போல பேரீச்ச மரங்களில் இருந்து இச்சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. [1] [2] [3]
பேரீச்சம் பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் பேரீச்சம்பழச் சர்க்கரை, சாதாரண வெள்ளை சர்க்கரையை விட குறைவான சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையாகும். பல உணவுகள் மற்றும் பானங்களில் பேரீச்சம்பழச் சர்க்கரையை சர்க்கரைக்குப் பதிலாக மாற்றலாம். [4] [5]
உலர் பேரீச்சம் பழத்தில் இருந்து முதலில் களிம்பை உருவாக்குவதன் மூலம் பேரீச்சம் பழச் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. மால்டோடெக்சுட்ரின் என்ற ஒரு பொதுவான உணவு சேர்க்கைப் பொருள் தயாரிக்கப்பட்ட பேரிச்சைக் களிம்புடன் முதலில் கலக்கப்படுகிறது. இந்த கலவை அடுப்பில் உலர்த்தப்பட்டு துகள்களாக அரைக்கப்படுகிறது. மால்டோடெக்சுட்ரின் மற்றும் பேரிச்சை களிம்பின் விகிதம் சர்க்கரையின் பண்புகளை தீர்மானிக்கிறது. [4] வீட்டில் பேரிச்சம்பழச் சர்க்கரையைத் தயாரிப்பதற்கு பல சமையல் வகைகள் உள்ளன. ஆனால் இதை வாங்கிக் கொள்ளவும் முடியும். சர்க்கரை உற்பத்தி செயல்முறையை தானியக்கமாக்குவதற்கும் பல முறைகள் உள்ளன.
பேரிச்சையின் வளர்ச்சியின் சில நிலைகள் உள்ளன: கலால், ரூதாப் மற்றும் தம்ர் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும். பேரீச்சம்பழச் சர்க்கரையை தயாரிப்பதற்கான சிறந்த பேரிச்சை வகை தமர் வகை பேரிச்சம்பழங்கள் ஆகும். ஏனெனில் அவை மிகக் குறைந்த ஈரப்பதமும் (சுமார் 30%) இனிப்பும் கொண்டவையாகும்.[6] ஒரு பேரீச்சம்பழத்தில் உள்ள சர்க்கரை அளவை எவ்வாறு தீர்மானிப்பது என்பது குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது பேரீச்சம்பழச் சர்க்கரைக்கு பயன்படுத்த சிறந்த பேரிச்சம் பழங்களை அடையாளம் காண உதவும்.