பேர்பூட் கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
திலோனியா, ராஜஸ்தான் இந்தியா | |
தகவல் | |
தொடக்கம் | 1972 |
நிறுவனர் | பங்கர் ராய் |
வளாகம் | திலோனியா |
இணையம் | www |
பேர்பூட் கல்லூரி[1] அல்லது வெறுங்கால் கல்லூரி என்று பொதுவாக அழைக்கப்படும் இதன் மற்றுமொரு பெயர் சமூக சேவை மற்றும் ஆராய்ச்சி மையம் (The Social Work and Research Centre ("SWRC")) ஆகும்.
இது ஓர் தன்னார்வ அமைப்பு. சமூகத்திற்கு கல்வி, திறன் உயர்த்துதல், உடல் நலம், குடி தண்ணீர், மகளிர் மேம்பாடு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் கவனிக்கத்தக்க செயலைச் செய்கிறது.[2] பங்கர் ராய் அவர்களால் 1972-ல் தொடங்கப்பட்டது இக்கல்லூரி. இது ராஜஸ்தான் மாநிலத்தின் திலோனியா கிராமத்தில் அமைந்துள்ளது. திலோனியாவின் நண்பர்கள் (Friends of Tilonia) எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.[3]
இக்கல்லூரி மக்களுக்கு இரவு நேரத்திலும் பாடங்கள் நடத்துகிறது. இக்கல்லூரி பெரும்பாலும் படிப்பை இடை நிறுத்தியவர்கள், தேர்ச்சியடையாதவர்கள் போன்ற குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது. இக்கல்லூரி நிறுவனர் ராய் டைம் (இதழ்) வெளியிட்ட செல்வாக்கான 100 நபர்கள் பட்டியலில் இடம்பெற்றார். இதுவரை 30,00,000 பேர் இக்கல்லூரியில் பயிற்சி பெற்றுள்ளனர். இக்கல்லூரி வகுப்பறைகளில் நாற்காலிகள் எதுவும் இல்லாமல் அழுக்கான தரைகளுடன் கூடியதாக இருக்கும். அப்போது தான் ஏழைக் குழைந்தைகள் இயல்பாய் கல்வி கற்ற இயலும்.[4] இக்கல்லூரியில் இரவு நேர வகுப்பும் நடத்தப்படும்.[5] 2008 ஆம் ஆண்டு 150 இரவு வகுப்புகளில் 3000 பேர் கல்வி கற்றனர்.[6][7]
பங்கர் ராய் பேர்பூட் கல்லூரியைத் தொடங்கினார்.[8] வறட்சியால் பாதிக்கப்பட்ட 100 இடங்களைப் பார்வையிட்டு அது தொடர்பாக 1972-ல் ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவினார்.[8] இக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நோக்கம் கிராமப்புறங்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதும், மக்களுக்கு மருத்துவம் மற்றும் சூரிய மின் சக்தி தொடர்பாய் பயிற்சி அளிப்பதும் ஆகும்.[8]
இவரது கல்லூரியில் இது வரை 30,00,000 பேர் சூரிய சக்தி பொறியாளராகவும், தையல் கலை வல்லுனராகவும், ஆசிரியர்களாகவும், கட்டிட வடிவமைப்பாளர்களாகவும் மற்றும் மருத்துவராகவும் பயிற்சி பெற்றுள்ளனர்.[8]
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)