பைரோசு தஸ்தூர் | |
---|---|
![]() | |
பிறப்பு | பம்பாய், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 30 செப்டம்பர் 1919
இறப்பு | 9 மே 2008 மும்பை | (அகவை 88)
பணி | பாடகர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1941–2006 |
பைரோசு தஸ்தூர் (Firoz Dastur) (30 செப்டம்பர் 1919 - 9 மே 2008) மேலும் பெரோசு தஸ்தூர் என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகரும், இந்திய பாரம்பரிய இசையில் கிரானா கரானாவில் (பாடும் பாணி) குரலிசைக் கலைஞருமாவார்.
1930களில் இந்தியத் திரையுலகில் பணியாற்றிய தஸ்தூர், 'வாடியா மூவிடோன்' தயாரித்த சில படங்களிலும் பிற தயாரிப்புகளிலும் நடித்தார். 1933 ஆம் ஆண்டில், ஜே. பி. ஹெச். வாடியாவின் கீழ் வாடியா மூவிடோன் அதன் முதல் பேசும் திரைப்படத்தை வெளியிட்டபோது, லால்-இ-யமான் என்ற படத்தில் குழந்தை நடிகராக பாடல்களை பாடினார்.[1] ஆனாலும் இந்திய பாரம்பரிய இசையே இவரது முதல் விருப்பமாக இருந்தது.
இவர் சவாய் கந்தர்வனின் சீடராக இருந்தார். கந்தர்வனின் மற்ற சீடர்களான பீம்சென் ஜோஷி மற்றும் கங்குபாய் ஹங்கல்,[2] ஆகியோருடன் 80களின் பிற்பகுதியில் சவாய் கந்தர்வ இசை விழாவில் பல ஆண்டுகளாக ஒரு வழக்கமான கலைஞராக இருந்தார்.
தஸ்தூரின் இசை அப்துல் கரீம் கானின் பாணிக்கு மிக நெருக்கமாக இருந்தது. இவர் பல மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுத்தார்.
தஸ்தூர் 2008 மே மாதம் மும்பையில் தனது 89 வயதில் சிலகாலம் நோய்வாய்பட்டு இறந்தார்.